100 படத்துக்கு மேல் நடிச்சு.. ஒரே ஒரு படத்தால் ஏழையான கஞ்சா கருப்பு..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகர்களின் வரிசையில் பல்வேறு நடிகர்கள் நடித்த நீங்கள் பார்த்து இருக்கலாம். அதில் கஞ்சா கருப்பு என்ற நடிகர் கவுண்டமணி, செந்தில், வடிவேலுவுக்கு பின் தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.

இவர் 2003-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளி வந்த பிதாமகன் திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து தன் பெயரை கஞ்சா கருப்பு என்று மாற்றிக் கொண்டார்.

100 படத்துக்கு மேல் நடிச்சு..

கஞ்சா கருப்பு அடுத்தடுத்து நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. அந்த வகையில் சசிக்குமார் இயக்கத்தில் வெளி வந்த சுப்பிரமணியபுரம் படத்தில் அவருக்கு நல்ல விமர்சனங்கள் வந்ததை அடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது.

இதனை அடுத்து கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்து பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறி அதிகளவு பணத்தை சம்பாதித்தார்.

சினிமாவில் நன்கு சம்பாதித்து செட்டிலான பிறகு மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் முடியாத குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவிகளை செய்த நல்ல உள்ளம் கொண்டவராக இவர் திகழ்ந்தார்.

ஒரே ஒரு படத்தால் ஏழையான கஞ்சா கருப்பு..

இதை அடுத்து எல்லா நடிகர்களுக்கும் வரும் ஆசை இவருக்கும் வந்துவிட்டது. இவர் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு படத்தை எடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்து அவர் அதை குறித்து முடிவும் செய்து விட்டார்.

இவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்ததை அடுத்து இவரது நண்பர்கள் பலரும் இவரிடம் அந்த படத்தை தயாரிக்க வேண்டாம் என்று பல்வேறு விதமான அறிவுரைகளை சொல்லியும் கேட்கவில்லை.

இதை அடுத்து இந்த படம் தயாரித்த பிறகு வெளி வந்து செம ஃபிளாப் ஆகி போனது. மேலும் இதனால் தனது பலவிதமான சொத்துக்களையும் இழந்து கடனாளியாக மாறியதை அடுத்து தான் இவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

எனினும் என்ன சொல்லி என்ன பயன் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்ட இவர் 14 வது நாள்களிலேயே பிக் பாஸ் சீசனை விட்டு வெளியேறினார். யார் சொல்லியும் கேட்காமல் படம் தயாரித்து தன் வாழ்க்கையை மொத்தமாக தொலைத்துக் கொண்ட இவர் கையில் இருந்த காசு மொத்தமும் கரைந்த பிறகு கடனை அடைப்பதற்காக வீட்டையும் விற்று விட்டார்.

இந்நிலையில் தற்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டில் வாழ்ந்து வரும் இவர் ஒரே படத்தால் தனது மொத்த சொத்தையும் இழந்ததோடு மட்டுமல்லாமல் ஏழையாக மாறிய கொடுமை பற்றி தற்போது இணையத்தில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version