சின்ன வயதில் திரிஷாவின் அந்த வீடியோவை பார்த்த போது.. ராஷ்மிகா ஓப்பன் டாக்..!

Rashmika Mandanna recently opened up about her admiration for the talented actress Trisha Krishnan, and it’s pretty relatable!

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான நடிகர் மட்டுமல்லாமல் சினிமாவில் பயணிக்க கூடிய சக நடிகர்கள் நடிகைகள் பலருக்கும் ஆல் டைம் ஃபேவரைட் ஆக இருக்கக்கூடிய ஒரு நடிகர்.

விஜய் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். புதிதாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி முதலமைச்சராகும் நோக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இனிமேல் நடிகர் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் திரிஷா ஜோடி தான் என்னுடைய பேவரைட் ஜோடி என கூறியுள்ளார்.

விஜயின் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா ஜோடி சிறப்பானதாக பார்க்கப்பட்டது. சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படம் உலகம் முழுதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் 1500 கோடிக்களை தாண்டி வசூலித்து வருகிறது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா தன்னுடைய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா தான் என்னுடைய பேவரைட் ஜோடி நான் சிறுவயதில் அவர்கள் நடிப்பில் வெளியான கில்லி படத்தை முதன்முறையாக பார்த்தேன்.

அதிலும் குறிப்பாக நடிகை திரிஷாவின் கில்லி படத்தில் இடம் பெற்ற ஷாலாலா என்ற பாடலின் வீடியோவை தான் நான் முதன் முதலில் பார்த்தேன். அப்போதிலிருந்தே நான் திரிஷாவின் ரசிகை.

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து திரையரங்கில் பார்த்த படத்தின் முதல் ஹீரோ விஜய் தான். இந்த படத்தில் இடம்பெற்ற அப்படி போடு பாடலுக்கு அதிக முறை நான் நடனமாடி இருக்கிறேன்.

என்னுடைய அப்பா ரஜினி ரசிகர். ஆனால், நான் முதலில் பார்த்த படம் கில்லி தான். நடிகை திரிஷாவின் ஷாலாலா பாடலின் வீடியோவை பார்த்ததிலிருந்து அவருடைய தீவிர ரசிகையாக நான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Summary in English : Rashmika Mandanna recently opened up about her admiration for the legendary Trisha Krishnan, and it’s all thanks to the iconic song “Shalala” from the movie *Ghilli*. Can you believe it? Rashmika, who has made quite a name for herself in the film industry, shared that watching Trisha’s performance in that catchy number totally won her over.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version