துரோகத்தால் சரிந்த பவர் ஸ்டார்!! வேதனையோடு ஓபன் டாக்..

பிரபல நடிகர் பவர் ஸ்டார் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட துரோகங்கள் தான் உடல் நிலையை பாதித்ததாக அண்மையில் தெரிவித்த கருத்து பற்றிய பதிவு. 

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் தன் படங்களை விளம்பரப்படுத்த பணத்தை அள்ளி வீசியவர். 

அந்த வகையில் அதிர்ஷ்டம் கை கொடுத்ததை அடுத்து புகழ் வெளிச்சம் கிடைத்து. திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடிக்கும் அளவிற்கு முன்னேறினார். 

துரோகத்தால் சரிந்த பவர் ஸ்டார்..

இதனை அடுத்து திரை உலகில் பிரபலம் ஆனது போதாது என்று அரசியலில் களம் இறங்கி விசிகா-வில் இணைந்த அப்போது தான் அவருக்கு திருமாவளவன் பவர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தார். 

இந்நிலையில் ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் அரசியல் என்று இரட்டை குதிரையில் சவாரி செய்த ஸ்ரீனிவாசன் இன்று சிறுநீரகக் கோளாறு காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 

அடுத்து நீங்கள் யோசிக்கலாம் பொருளாதார ரீதியில் ஒரு மிகப்பெரிய இடத்தில் இருந்த இவர் எப்படி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். எதனால் இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பலாம். 

இதைத்தொடர்ந்து அண்மையில் பவர் ஸ்டார் தன் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு அவர் எப்படி இருக்கிறார் என்ன ஆனது என்பது போன்ற விஷயங்களை சொல்லி இருக்கிறார். 

அந்தப் பேட்டியில் மருத்துவர்கள் தன்னை பரிசோதனை செய்து எனக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதனை அடுத்து தான் இன்று டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு என்ன சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்வார்கள். 

மருத்துவமனை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை என்று ஏன் நினைக்க வேண்டும் எங்கு நல்ல சிகிச்சை கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அந்த வகையில் கிண்டி மருத்துவமனையில் வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளது. 

வேதனையோடு ஓபன் டாக்..

உடலில் எந்த விதமான பாதிப்பும் இல்லை ஆனால் கிட்னி பிரச்சனைக்கான அறிகுறிகள் தெரிந்ததை அடுத்து பெரிய அளவு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே நல்ல சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் என்று இங்கு வந்திருக்கிறேன். 

இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் மருத்துவமனையில் சேர சொன்னதை அடுத்து உடனடியாக சரி என்று சொன்னதால் மருத்துவமனையில் தற்போது இருக்கிறேன் தற்போதைக்கு பொருளாதார அளவில் என் கை ஒடுங்கி விட்டது. 

இதற்குக் காரணம் சிலர் என்னை ஏமாற்றியதும் செய்த துரோகங்களும் என்னை மிகப்பெரிய கடனாளியாக மாற்றி இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பெரிய கடன்கள் இல்லை நம்பி நிறைய ஏமாந்து விட்டேன். நம்பிக்கை துரோகிகள் எனக்கு அதிகம் அதனால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.

எனவே இந்த நிலைமை வெகு சீக்கிரத்தில் சரியாகும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். எப்போதும் உற்சாகமாக இருப்பேன் கோடிக்கணக்கில் பணம் உள்ளது என்பதற்காக தனியார் மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என்பதையும் கூறி இருக்கிறார். 

Summary in English: Life can throw some pretty unexpected curveballs at us, right? Just when you think everything is going smoothly, you find yourself dealing with betrayal that hits hard. It’s like being knocked off your feet, and in some cases, it can even lead to health issues. Take the recent buzz about Power Star—his struggles with kidney problems have got everyone talking.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version