MUKUND பண்ண தப்பு..! நீங்க பாக்காத முகுந்த்தோட இன்னொரு முகம்..! Real Indhu Rebecca உடைத்த ரகசியம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் உலகம் முழுதும் 200 கோடி ரூபாயை வசூல் செய்த மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணம் என்றால் அது மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் அவர் நாட்டுக்காக செய்த தியாகம் என்று கூறலாம்.

இந்த படத்தில் அவ்வளவு அருமையாக அவருடைய கதாபாத்திரம் காட்டப்பட்டிருந்தது. மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது.

இதனை தொடர்ந்து அவருடைய உண்மையான மனைவி இந்து ரெபேக்கா பல்வேறு ஊடகங்களில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் முகுந்து வரதராஜன் பற்றி பலருக்கும் தெரியாத ரகசியமான இன்னொரு முகத்தை பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, அவர் நாட்டிற்காக போரில் பங்கேற்க சென்று விட்டார். ஆனால், நான் அவருக்காக என்னுடைய வீட்டில் போரிட வேண்டியிருந்தது.

எனக்கு இரண்டு அண்ணன்கள். இருவருமே என்னை விட 10 வயது, 8 வயது பெரியவர்கள். இன்னும் சொல்லப்போனால் எனக்கு மூன்று அப்பா என்று தான் நான் சொல்லுவேன்.

என்னுடைய மூன்று அப்பாக்களையும் நான் சமாதானப்படுத்த வேண்டி இருந்தது. மூன்று அப்பாக்களையும் என்னுடைய காதலுக்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டியிருந்தது.

முகுந்த் செய்த தவறு என்னவென்றால் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் என்னுடைய நாட்கள் மிக மெதுவாக நகர்ந்தது.

என்னுடைய நாட்கள் மெதுவாக நகர்ந்தது என்றாலும் அது எங்களுடைய காதலை வலுப்படுத்தியது என்று தான் கூற வேண்டும். முகுந்து செய்த தவறு என்னவென்றால் முதன்முறையாக என்னுடைய பெற்றோரிடம் அவர் பேசும்போது மிகவும் ஒரு விவரம் அற்ற முறையில் பேசினார்.

ஆனால், மூன்று ஆண்டுகள் கழித்து என்னுடைய பெற்றோரிடம் அவர் பேசும்போது அப்படியே ஆளே மாறி இருந்தார். அவருடைய பேச்சு மற்றும் அவருடைய வேலை குறித்து தெரிந்து கொண்ட என்னுடைய பெற்றோர்கள் எங்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

என்னுடைய உறவினர் ஒருவர் கடற்படையில் இருந்தார். அவருக்கு முகுந்தை பற்றி நன்றாக தெரிந்திருந்தது. அவரும் முகுந்த் பற்றி என்னுடைய வீட்டில் நல்ல விஷயங்களை கூறினார். அதுவும் எங்களுடைய காதல் வெற்றி பெற உதவியாக இருந்தது என பேசி இருக்கிறார். இவருடைய அந்த பேச்சு தற்போது இணையத்தின் வைரலாகி வருகின்றது. 

Summary in English : In a recent chat, Indhu Rebecca, the wife of Major Mukunth Varatharajan, opened up about some lesser-known sides of her husband that truly showcase his personality beyond the uniform. While most people see him as a dedicated officer, Indhu revealed that he has a fun-loving side that often surprises those who know him best.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version