இதுக்கு இந்தியன் 2 பராவாயில்ல.. லாஜிக், பிசிக்ஸ் எல்லாமே எங்க போச்சு.. கேம் சேஞ்சர் விமர்சனம்..!

பிரம்மாண்ட இயக்குனர்கள் மற்றும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் அதிகம் குறிப்பாக தெலுங்கு திரைப்படங்கள் என்றால் லாஜிக் இல்லாத மேஜிக் தான் ரசிகர்களுக்கு ஒர்க் அவுட் ஆகும் என அவர்களே யூகப்படுத்திக் கொண்டு பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி கிராவிட்டி என எதையும் தங்களுடைய படங்களின் காட்சிகளில் பொருத்திப் பார்ப்பது கிடையாது.

அப்படி இருக்கும்பொழுது கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருவதை தொடர்ந்து பலரும் இந்த காட்சியை கலாய்த்து வருகின்றனர்.

ஒரு நாள் முதல்வர், லஞ்சம் வாங்கினால் கொலை செய்யும் தாத்தா, அம்பி அந்நியனாக மாறுவது, அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை ஆட்டைய போட்டு வெள்ளையாக மாற்றி மக்களுக்கே அதனை பயன்படுத்துவது, இப்படி ஒவ்வொரு படங்களிலும் அரசியல் குறித்த தன்னுடைய சவாலான திரைக்கதையை மாற்றி தன்னுடைய ஸ்டைலில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி பொதுமக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார் இயக்குனர் சங்கர்.

அவருடைய இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள Game Changer திரைப்படமும் அரசியலை மையமாகக் கொண்டு வெளியாகி இருக்கிறது. ஒரு படம் வெளியான உடனே அதிக காலையிலேயே அந்த படத்திற்கு எதிரான நெகட்டிவ் கருத்துக்களை பரப்ப வேண்டும் என ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

அதுபோலத்தான் இந்த படத்தை காப்பாற்ற அந்த குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களும் இந்த சண்டையில் இணைந்து இணைய பக்கங்களை போர்க்களமாக மாற்றி விடுவார்கள்.

இங்கே எப்படி அஜித- விஜய் ரசிகர்கள் சண்டை நடைபெறுகிறதோ..? அதே போல தெலுங்கில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சங்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில் இயக்குனர் சங்கர் Game Changer என்ற படத்தின் மூலம் கம்பாக் கொடுத்து இருக்கிறார் என்று ராம்சரண் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இதற்கு இந்தியன் 2 படமே பெட்டர் எனவும் ஆரம்பக் காட்சியிலேயே லாஜிக்கில் எத்தனை ஓட்டை.

லாஜிக் என்றால் எத்தனை கிலோ..? அது எங்கே விற்கும்.. என்று கேட்பது போல ஒரு காட்சியை அறிமுக கட்சியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சங்கர் என்று கருத்துக்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

ரயில் தண்டவாளத்தில் கட்டி போடப்பட்டிருக்கும் ஆட்களை ஹெலிகாப்டரில் வரும் ராம்சரண் அப்படியே தன்னுடைய நீண்ட வாள் கொண்டு அந்த கயிறுகளை அறுக்கிறார்.

அடுத்த நொடியே அவர்கள் அந்த தண்டவாளத்தில் இருந்து எஸ்கேப் ஆகிறார்கள். ரயில் அவர்களை நசுக்க ஒரு வினாடி மட்டுமே இருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடக்கிறது. இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் கடுமையான கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Fans have been buzzing about Director Shankar‘s latest flick, Game Changer, and not all of it is praise. Many viewers are pointing out some pretty noticeable logic holes in the movie that have left them scratching their heads.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version