நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி இவருடைய புதிய பெயர் ரவி மோகன் என்பதாகும். இந்த பெயர் மாற்றம் குறித்து பேசிய ஜெயம் ரவி நான் ரவி மோகன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன்.
என்னுடைய இந்த பெயர் மாற்றம் என்னுடைய வாழ்க்கைக்கான மாற்றமாக நான் பார்க்கிறேன். என்னுடைய தொழிலின் முன்னேற்றத்திற்கான மாற்றமாக நான் பார்க்கிறேன்.என்னுடைய புதிய அத்தியாயமாக நான் பார்கிறேன்.
இத்தனை நாட்களாக என்னை ஜெயம் ரவி என்ற அனைத்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு திடீரென என்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றி கூறுவதற்கு சிரமமாக இருக்கலாம்.
ஆனால், தயவுசெய்து ஊடகங்கள், ரசிகர்கள் இனிமேல் என்னுடைய பெயரை ரவி மோகன் என்று அழைக்குமாறு அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார் நடிகர் ரவி மோகன்.
இவருடைய இந்த பேட்டி தற்போது இணைய பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.