“ரகசிய கேமரா உள்ளே சென்ற வழி இது தான்..” நித்யானந்தா ரஞ்சிதா குறித்து ஷாக் தகவல் சொன்ன பிரபலம்..!

In a recent exposé, journalist Tamizha Tamizha Paandian pulled back the curtain on some seriously shocking revelations about Ranjitha and Nithyanandha

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கியவர் நடிகை ரஞ்சிதா. குடும்பப்பாங்கான முக அமைப்பு, வாட்டசாட்டமான தோற்றம், எடுப்பான முன்னழகு, ஆளை மயக்கும் உடல்வாகு என கவர்ச்சி ராணியாக இருந்த நடிகை ரஞ்சிதாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த நடிகை ரஞ்சிதா ஒரு கட்டத்தில் கிளாமரில் இறங்கி கலக்கினார். நடிகர்கள் சத்யராஜ், அர்ஜுன், விஜயகாந்த், முரளி, நடிகர் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

நித்தியானந்தாவின் தீவிர பக்தையாக மாறிய நடிகை ரஞ்சிதா தற்போது கைலாசாவின் இருப்பதாகவும் அந்த நாட்டின் பிரதமராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் இணைய பக்கங்களில் தகவல்கள் உலா வருகின்றன.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் பல திடுக்கிடும் விஷயங்களை தன்னுடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதில் அவர் கூறியதாவது, ஆந்திராவில் பிறந்தவர் இவருடைய தந்தை ஒரு காவல்துறை அதிகாரி. சினிமா மீது ஆர்வம் இருந்த காரணத்தினால் தன்னுடைய காவல்துறை அதிகாரி வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து பல்வேறு கம்பெனிகளில் ஏறி இறங்கினார். எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்பதற்காக.

ஆனால், தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தன்னுடைய மூன்று மகள்களில் ஒருவரையாவது நடிகையாக்கி விட வேண்டும். சினிமாவிற்குள் அறிமுகமாகப்படுத்தி விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தார்.

அதில் தன்னுடைய முதல் மகள் நிர்மலா என்பவருக்கும், கடைசி மகளான ஜோதி என்பவருக்கும் விருப்பமில்லை. ஆனால் இரண்டு மகள்களுக்கும் நடுவில் பிறந்த நடிகை ஸ்ரீவள்ளிக்கு சினிமாவின் மீதும் நடிப்பின் மீதும் ஆர்வம் இருந்தது.

ரஞ்சிதாவின் உண்மையான பெயர் ஸ்ரீவள்ளி என்பதாகும். ரஞ்சிதாவிற்கு சினிமா மீது ஆர்வம் இருப்பதால்.. அவரை எப்படியாவது நடிகையாக விட வேண்டும் என்ற முயற்சியில் பல நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு கடப்பா ரெட்டியம்மா என்ற திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பை பெற்று கொடுக்கிறார் அவருடைய தந்தை அசோக்.

அதன் பிறகு நடிகர் மற்றும் இயக்குனரான பாரதிராஜாவிடம் வந்து தன்னுடைய மகளை நடிகையா இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர்தான் ஸ்ரீவள்ளி என்று இருந்த நடிகை என்ற பெயரை ரஞ்சிதா என்று மாற்றினார்.

நாடோடி தென்றல் என்ற அந்த திரைப்படத்தில் வாத்து மேய்க்கும் பெண்ணாக நடித்திருந்தார் ரஞ்சிதா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் ரஞ்சிதாவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

அதற்குப் பிறகு அர்ஜுனுடன் ஜெய்ஹிந்த், சத்யராஜ் உடன் அமைதிப்படை, என் ஆசை மச்சான், கருப்பு நிலா, கர்ணா, மக்களாட்சி, சின்ன வாத்தியார் என தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. பிரபல நடிகையாக மாறினார் நடிகை ரஞ்சிதா.

சுமார் 10 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் கிளாமர் ராணியாக கொடிகட்டி பறந்த நடிகை ரஞ்சிதாவிற்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ராணுவ வீரரான ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

ஆனால், திருமணம் ஆன ஆறு மாதத்திற்குள் இருவருக்கும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். கணவரை பிரிந்த பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்த நடிகை ரஞ்சிதாவிற்கு நித்தியானந்தாவின் அறிமுகம் கிடைத்தது.

பிறகு அவருடன் பல ஆண்டுகள் சேர்ந்து பயணித்தார். ஒரு கட்டத்தில் அவருடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கவும் பட்டார். அதை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோ காட்சிகள் எல்லாம் வெளியானது. அது தனிக்கதை.

நடிகை ரஞ்சிதா மட்டுமல்ல அவருடைய மூத்த சகோதரி நிர்மலா மற்றும் இளைய சகோதரி ஜோதி என மூன்று பேருமே நித்யானந்தாவின் ஆசிரமத்திலேயே ஐக்கியமாகி விட்டார்கள்.

இதனால் தன்னுடைய மகள்களை மீட்டெடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவருடைய தந்தை அசோக். ஆனால், மூத்த மகள் நிர்மலாவும் ரஞ்சிதாவும் நித்தியானந்தாவின் ஆசிரமத்திலிருந்து வர மறுத்துவிட்டனர். ஜோதி மட்டும் தன்னுடைய தந்தையுடன் சொல்வதாக கூறி வந்து விட்டார்.

அதுவரை நித்யானந்தாவிற்கு பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு தலைமை சிஷ்யை அந்த இடத்தில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு நடிகை ரஞ்சிதாவை கொண்டு வந்தார் நித்தியானந்தா.

இதுதான் அவருடைய வாழ்க்கையில் அவர் செய்த மிகப்பெரிய தவறு. இத்தனை நாட்களாக பணிவிடை செய்த தன்னை விரட்டி விட்டு நடிகர் ரஞ்சிதாவை அந்த இடத்தில் நியமித்த காரணத்தினால் கோபத்திற்கு உள்ளான அந்த பெண் லெனின் கருப்பன் என்பவரை வைத்து நித்தியானந்தாவின் அறையில் ரகசிய கேமராவை செட் செய்து அங்கு நடக்கக்கூடிய அனைத்து வேலைகளையும் ரெக்கார்ட் செய்து அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்பி ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா லீலைகளை அம்பலப்படுத்தினார்.

இப்போது ரஞ்சிதா கைலாசாவின் பிரதமராக இருக்கிறார். கைலாசாவின் அனைத்து கட்டுப்பாடுகளும் ரஞ்சிதாவின் கையில் தான் தற்போது தவழ்ந்து கொண்டிருக்கிறது என தமிழா தமிழா அவர்கள் பாண்டியன் அவர்கள் இந்த பேட்டியில் பேசியிருப்பது பரபரப்பை கிளம்பி இருக்கிறது.

Summary in English : In a recent expose, journalist Tamizha Tamizha Paandian pulled back the curtain on some seriously shocking secrets surrounding Ranjitha and Nithyanandha. If you’ve been following their story, you know it’s been a whirlwind of controversy and intrigue. Tamizha has a knack for digging deep, and this time he didn’t hold back!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version