மிக்சர் மாமா கேரக்டர் உருவான விதம்.. கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட சுவாரஸ்மான தகவல்..!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த நாட்டாமை திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. கே.எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்த இந்த திரைப்படமானது அவருக்கு மாபெரும் வெற்றியை தந்ததோடு மட்டுமல்லாமல் வசூலையும் அள்ளி குவித்தது.


அந்த வகையில் இந்த படத்தில் நடித்திருக்கும் மிச்சர் மாமா நகைச்சுவை காட்சியை எப்படி படம் எடுத்தேன் என்பது பற்றி அண்மை பேட்டி ஒன்று இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் பகிர்ந்திருக்கும் விதத்தைப் பார்த்து பலரும் அசந்து போய்விட்டார்கள்.

மிக்சர் மாமா கேரக்டர் உருவான விதம்..

அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் பழம் பெரும் நடிகரான விஜயகுமார் நாட்டாமை கேரக்டரை செய்ததை அடுத்து சரத்குமார், குஷ்பூ, மீனா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் என பல நடிகர்கள் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் கிராமப்புற கட்டப்பஞ்சாயத்தை அப்படியே ரசிகர்களின் மத்தியில் கொண்டு வந்து சேர்த்திருக்கும் கே.எஸ் ரவிக்குமார் நாட்டாமையாக விஜயகுமாரை நடிக்க வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

அந்த வகையில் இந்த படத்தில் இடம் பிடித்த நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்ற வசனம் கொட்ட பாக்கு கொழுந்து வெத்தலை என்ற பாடலும் தமிழகம் எங்கும் பிரபலமான ஒன்றாக மாறியது.

அத்தோடு இந்த படத்தின் ஹைலைட்டாக மிச்சர் காமெடி இடம் பிடித்திருக்கும். அதிலும் கவுண்டமணிக்கு பெண் பார்க்க சென்ற போது தனது பழைய காதலியின் நினைவு வர மை சன் என்று தனக்கே உரிய நக்கலான பாணியில் கவுண்டமணி நடித்து அசத்தியிருப்பார்.

பெண் பார்க்கும் படத்தை ஒரு மிகப்பெரிய பிரச்சனை வெடித்து வந்திருக்க கூடிய வேளையில் எதையும் கண்டுகொள்ளாமல் ஒருவர் மிச்சர் சாப்பிட்டபடியே இருப்பார். அதை பார்த்த கவுண்டமணி யார் இது என்று கேட்பார். மகளுக்கு இன்சியல் பிரச்சனை வரக்கூடாது என்று தான் 20 வருஷமா இதுக்கு சோறு போடுற என்று அந்த பெண்ணின் தாயார் ஒரு போடு போடுவார்.

கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட சுவாரஸ்மான தகவல்..

அப்படி அந்த காட்சியில் மிச்சர் மாமாவாக நடித்த இவர் ஒரு மிகச்சிறந்த எலக்ட்ரீசியன் ஆக திகழ்ந்திருக்கிறார். இவர் வேலை செய்யும் போதும், செய்யாது இருக்கும்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். இவர் ஞாபகம் வர உடனே அவரைக் கூட்டி வரச் சொன்னேன்.

இதை அடுத்து அவர் என்னிடம் வந்து எனக்கு நடிக்கவெல்லாம் வராது என்று சொல்ல நான் உடனே நீங்க நடிக்கவே வேண்டாம். ஆக்ஷன் என்று சொன்னதும் மிச்சர் சாப்பிட்டே இருங்க அது போதும் என்று சொல்லி தட்டி நிறைய மிச்சரை போட்டு கையில் கொடுத்து விட்டேன்.

அவ்வளவுதான் இந்த காட்சி மிகப் பெரிய அளவு ஹிட்டாகியதை அடுத்து அந்த எலக்ட்ரீசியன் திரைத்துறையில் எங்கோ ஒரு இடத்தில் போற்றக்கூடிய நிலைக்கு வந்து விட்டார். இதை அடுத்து அவர் தாம்பூல தட்டுடன் வீட்டுக்கு வந்து என்னையும் நடிகராக மாத்திட்டீங்க சார் என்று நன்றியோடு பாராட்டி விட்டு ஆசீர்வாதத்தையும் பெற்று சென்றார் என்று அண்மை பேட்டியில் கே எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அத்தோடு இந்த காட்சியை எவ்வளவு எளிமையாக எடுத்து இருக்கிறார் என்று கே.எஸ் ரவிக்குமாரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version