கங்குவா Day 1 வசூல்..! 2000 கோடியை தொட இன்னும் இவ்ளோ தான் இருக்கு..!

கங்குவா மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி முதல் நாளே ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்திய ஒரு திரைப்படம்.

நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை திஷா பட்டாணி ஹீரோயினாக நடித்திருந்தார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. பொதுவாக பேண்டஸி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருப்பது ஒன்றும் பெரிது கிடையாது.

ஆனால், படத்தை ப்ரொமோட் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான படத்தின் தயாரிப்பாளருக்கு ஞானவேல் ராஜா ஒரு பக்கம் நடிகர் சூர்யா ஒரு பக்கம் என இரண்டு பக்கமும் பிரமோஷன் என்ற பெயரில் படத்தை இழுத்ததில் கவட்டை கிழிந்தது தான் மிச்சம்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறும் போது கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் செய்யும். முதல் பாகத்திற்கு யாராவது போட்டியாக படத்தை வெளியிடலாம். ஆனால், இரண்டாம் பாகத்தோடு போட்டி போட யாருமே வர மாட்டார்கள். அந்த அளவுக்கு படம் தாரமான படமாக இருக்கும் என்று பேசி இருந்தார்.

மறுபக்கம் நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்று கூறியிருந்தார். இதனால் இந்த படத்தின் மீது இந்த எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிரியது.

ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்ததா என்று கேட்டால் பத்து சதவீதம் கூட ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை இந்த படம்.

கங்குவா எப்படி இருக்கிறது என தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் எந்த படமும் வெளியாகாத ஒரு நாளில் முதல் நாளே நிறைய திரைகளில் வெளியிட்டு முடிந்தவரை வசூலை பார்த்து விட வேண்டும் என்ற முடிவில் இறங்கி இருப்பார்கள் போல் தெரிகிறது.

இன்று வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு என படம் தாக்கு பிடிக்கும். ஆனால், திங்கட்கிழமை முதல் மீண்டும் அமரன் படம் திரையிடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறுகிறார்கள் இன்னும் சில ரசிகர்கள்.

இந்நிலையில், முதல் நாளில் உலகம் முழுதும் 22 கோடிகளை வசூல் செய்திருக்கிறது கங்குவா திரைப்படம். 2,000 கோடி வசூல் என்ற இலக்கை தொட இன்னும் 1,978 கோடி ரூபாய்கள் மட்டுமே பாக்கி உள்ளது.

அடுத்தடுத்து நாட்களில் படத்தின் மீது இருக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக பலத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட வாய்புப்ள்ளது.

Summary in English : Kanguva is on a mission to hit that magical 2000 crores mark at the box office, and they’re just 1978 crores away! It’s pretty exciting to see how close they are to reaching this milestone. With all the buzz around the film, fans are eagerly anticipating its success. The hype is real, and everyone seems to be rooting for Kanguva to make history.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version