கங்குவா படத்தில் முன்னணி நடிகர் Surprice கேமியோ..! இது வேற லெவல்..!

நடிகர் சூர்யா, பாபி தியோல், நடிகை திஷா பதானி இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியாகி உள்ள கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் விமர்சனம் என்ன..? படம் எப்படி இருக்கிறது..? என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரம் இருக்கிறது என்று பட குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வெளியாகின.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் தம்பியும் பிரபல நடிகருமான கார்த்தி கிளைமாக்ஸில் சில வினாடி காட்சிகளில் நடித்திருக்கிறார்.

நடிகர் சூர்யா கங்குவா படத்தை பிரமோஷன் செய்வதற்காக நாடெல்லாம் அலைந்து திரிந்து பிரமோஷன் செய்தார். ஆனால், தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு போதுமான பிரமோஷன் செய்யப்படவில்லை என்பதே பொதுவான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

ஊரெல்லாம் அலைந்து திரிந்து பிரமோஷன் செய்யும் நடிகர் சூர்யா தமிழ் சினிமா ரசிகர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை. இங்கே, ஒரு ஐந்து நகரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து இருக்கலாமே..? என்ற கேள்வி எழுப்புகிறார்கள்.

குறிப்பாக வடநாட்டில் ப்ரமோஷன் ஒன்றுக்கு தாமதமாக சென்றிருக்கிறார் நடிகர் சூர்யா. அங்கே பத்திரிகையாளர்கள் சிலர் சூரியாவை ரவுண்டு கட்டி இவ்வளவு தாமதமாக வந்தால் பத்திரிகையாளர்களுக்கு என்ன மரியாதை..? எங்களுக்கு வேறு வேலை இல்லையா..? என்பது போல சூர்யாவை சத்தம் போட்டனர்.

இப்படி வடநாட்டில் திட்டு வாங்குவதற்கு பதிலாக இங்கு நம்ம ஊரில் உங்கள் படத்துக்கு வேலை செய்திருந்தால் படத்திற்கு இன்னும் பிரமோஷன் கிடைத்திருக்குமே.. பல்வேறு முக்கிய நகரங்களில் காலை காட்சியே இன்னும் டிக்கெட் விற்பனையாகாமல் இருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது..? என தெரியவில்லை என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி நடித்த சில வினாடி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : In a fun twist for fans, the leading Tamil actor recently made a surprise cameo in Suriya’s much-anticipated movie, “Kanguva.” This unexpected appearance has everyone buzzing! Known for his impressive performances and charisma, the actor’s brief but impactful role adds an exciting layer to the film.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version