மண்டை காயுது.. எமோஷனல் கனெக்ட்டே இல்ல.. கதை எங்க..? ஆனால்.. “கங்குவா” திரை விமர்சனம்..!

நடிகர் சூரியா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி உள்ள கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த கலவையான விமர்சனத்திற்கு முக்கிய காரணம் கிளைமாக்ஸ் காட்சியில் கேமியோகேரக்டரில் உள்ளே நுழைந்த நடிகர் கார்த்தி என கூறலாம். மற்றபடி படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள்..? என்ன புரிந்து கொள்வது..? என ஒன்றுமே புரியாமல் மோசமான திரைக்கதையுடன் வெளியாகி இருக்கிறது கங்குவா என படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

ரசிகர்களின் இந்த கோபத்துக்கு காரணம் கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் செய்யும்.. 12 ஆயிரம் திரைகளில் வெளியிடுகிறோம்.. என்றெல்லாம் படக்குழு ஏகப்பட்ட ஹைப் ஏத்திவிட்டது தான் என கூறலாம்.

சாதாரணமாக வெளியாகி இருந்தால் கங்குவா திரைப்படம் நிச்சயமாக ஒரு 150 கோடி 200 கோடி வசூலிக்கக் கூடிய படம் தான். ஆனால், ஏதோ அவதார்.. ஹாலிவுட் படங்கள் ரேஞ்சுக்கு 2000 கோடி வசூல் செய்யும் என்றெல்லாம் தயாரிப்பவர் பேசியதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

அந்த அளவுக்கு படத்தில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை.. இப்போதைய சூழலில் 200 கோடி தொடுவது என்பது மிகப்பெரிய சிரமம் என கூறலாம். இதற்கு என்ன காரணம் என்றால் படத்தில் முதல் பாதியில் எந்த இடத்திலும் ரசிகர்களால் படத்துடன் ஒன்றிலிருந்து பார்க்க முடியவில்லை.

ஒரு காட்சிக்கும்.. இன்னொரு காட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தனித்தனியாக காட்சிகள் நகர்கின்றன. பொதுவாக படம் தொடங்கிய 15 முதல் 20 நிமிடங்களுக்குள் படம் அடுத்து எதை நோக்கி நகர போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்து விட வேண்டும்.

ஆனால், இடைவேளையின் போதும்.. அவ்வளவு ஏன் படமே முடிந்த பின்பும் படம் எதை நோக்கி பயணிக்கிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இல்லை. போதக்குறைக்கு கிளைமாக்ஸ் முடிந்த பின்பும் இரண்டாம் பாதிக்கான பாகத்திற்கான லீட் கொடுத்து முடிக்கிறார்கள்.

அது எதற்கு..? என்றும் தெரியவில்லை. இரண்டாம் பாதியில் சூர்யாவிற்கும் கார்த்திக்கும் இடையே சண்டை நடக்கும் அவ்வளவு தான். அதை தவிர வேறு எந்த எதிர்பார்ப்புடனும் இந்த கிளைமாக்ஸ் இல்லை என்பது பொதுவான சினிமா ரசிகரின் கருத்தாக இருக்கிறது.

அஞ்சான் படத்திற்கு எப்படி லிங்குசாமி கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கினாரோ.. அதே போல 2000 கோடி வசூல் செய்யும் என்ற ஒரு உருட்டையை உருட்டி விட்டார் கங்குவா தயாரிப்பாளர்.

சிறுத்தை சிவா அவர்கள் படத்தின் திரைக்கதையில் இன்னுமே நிறைய கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ரசிகர்களுடன் கதாநாயகன் எமோஷனலாக கனெக்ட் ஆக வேண்டும் என்பதை சிறுத்தை சிவா இன்னுமே உணர வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் படத்தில் வில்லன்கள் மீது கூட எதுவும் பெரிய ஒரு கோபமோ அல்லது எரிச்சலோ ரசிகர்களுக்கு தோன்றவில்லை. அந்த அளவுக்கு தான் வில்லன் கதாபாத்திரங்களும் அமைந்து இருக்கின்றன.

கடைசியாக நடிகர் கார்த்தியின் கேமியோ தோற்றம் ரசிக்கும் விதமாக இருந்ததே. தவிர ஒட்டுமொத்த படமாக படம் முடித்து வந்த பிறகு மண்டை காய்ச்சல் தான் மிச்சம் என்று புலம்புகிறார்கள் ரசிகர்கள்.

இந்த நேரத்தில் நடிகர் சூர்யா இந்த படத்திற்கு கொடுத்துள்ள உழைப்பை குறை சொல்ல முடியாது. ஒட்டுமொத்த படத்தையும் தன்னுடைய தோளில் ஒற்றைய ஆளாக சுமந்து செல்கிறார்.

நடிகர் சூர்யாவின் முக பாவனைகளும், மிரட்டலான நடிப்பு மட்டுமே ரசிகர்களை இரண்டரை மணி நேரம் திரையரங்கில் அமர வைத்தது எனக் கூறலாம்.

மற்றபடி ஒட்டுமொத்த பட குழுவின் சூர்யாவின் உழைப்பை இரண்டரை ஆண்டு காலமாக வீணடித்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். நடிகர் சூர்யா போட்ட உழைப்பில் பாதியை படக்குழு கதையில் செலுத்தி இருந்தால் நிச்சயம் கங்குவா ரசிகர்களை கவர்ந்திருக்கும்.

ஆனால், மீண்டும் நடிகர் சூர்யாவின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி மோசமான முடிவை சந்தித்த படங்கள் பட்டியலில் இணைந்திருக்கிறது இந்த கங்குவா திரைப்படம் என்பது பொதுவான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Summary in English : Suriya’s latest flick, “Kanguva,” has hit the screens, but it seems like not everyone is rolling out the red carpet for it. Fans have taken to social media to express their disappointment, and the reviews are coming in less than stellar. Many were excited about Suriya’s return to action-packed roles, but it looks like “Kanguva” hasn’t quite lived up to the hype. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version