“கத்திக்கிட்டே இருக்காங்க.. இது என்ன கன்றாவி..” கங்குவா படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..?

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது.

மிகப்பெரிய பொருட்செலவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

கடந்த இரண்டு வருடமாக நடிகை சூர்யாவின் எந்த படமும் திரையரங்கில் ரிலீஸ் ஆகவில்லை.

கங்குவா திரைப்படத்திற்காக தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன சொல்றாங்க என்பதை வாங்க பார்க்கலாம்…

கத்துறானுங்க.. கத்துறானுங்க கத்திகிட்டே கெடக்கானுவ..

கங்குவா It’s an EPIC BLOCKBUSTER.. இது நாள் வரை வெளியான சூரியா, பாபி தியோல் ஆகியோரின் படங்களில் இது சிறந்த படமாக இருக்கிறது. திஷா பதானியும் பார்பதற்கு சூடாக இருக்கிறார்.

பின்னணி இசை உச்சம்… நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சிகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளனர். கிராஃபிக்ஸ் காட்சிகளும் தரமாக இருக்கிறது.

எந்த விளைக்கும் இதனை தவற விட்டு விடாதீர்கள்.

கிளைமாக்ஸ் காட்சியில் சூரியாவின் சிக்ஸ் பேக் மற்றும் கார்த்தியின் அறிமுகம் ரசிகர்களை புல்லரிக்க செய்து விட்டது.

என்ன கண்றாவிடா இது..

கங்குவா ஒரு பேண்டஸி ஆக்சன் திரைப்படம்.. நன்றாக எடுத்து இருக்க வேண்டிய ஒரு கதை …ஆனால் குழப்பமான வகையில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சூர்யா அவருடைய கதாபாத்திரத்தை மிகுந்த சிறத்தை எடுத்துக் கொண்டு நடித்துள்ளார். அதனை பாராட்டியே ஆகவேண்டும். ஆனால், வெறும் நடிப்பை மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதை இல்லாத ஒரு படத்தை காப்பாற்றுவது என்பது கடினமான விஷயம்.

இந்த படத்தில் நிஜமாகவே அருமையான சில பக்கங்கள் இருக்கின்றன. ஆனால், அப்படிப்பட்ட காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் கவரும் விதமாக இல்லை.

ஒரு படத்துடன் எமோஷனலாக கனெக்ட் ஆகுவது என்பது மிக முக்கியமான விஷயம். ஆனால், இந்த படத்தில் அது சுத்தமாக இல்லை. இயக்குனர் சிவா தன்னுடைய திரைக்கதையை முதல் பாதியில் மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.

ஆனால், ஒரு புள்ளிக்கு மேலே மிகவும் கடினப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. திரைக்கதை திணறுகிறது. பின்னணி இசை சில இடங்களில் தன்னுடைய வேலையை செய்திருக்கிறது. ஆனால் நிறைய இடங்களில் பின்னணி இசை இரைச்சலாகவே இருக்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 

Summary in English : Suriya’s latest flick, “Kanguva,” has taken Twitter by storm, and fans can’t stop buzzing about it! From the moment the trailer dropped, excitement was palpable across social media. Fans are raving about Suriya’s stellar performance, with many calling it one of his best roles yet. The action sequences? Absolutely mind-blowing!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version