கே பி சுந்தராம்பாள் வீடு, ஜாதி.. ஏமாற்றிய கணவர்.. வாழ்நாள் முழுதும் எடுத்த சபதம்..

தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை. இந்தியாவிலேயே முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரான முதல் நடிகை. தங்கத்தட்டில் உணவு சாப்பிட்டவர். பிரிட்டிஷ் ராணியால் தேடி வந்து பார்க்கப்பட்டவர். சுதந்திர போராட்ட வீரர். அவ்வையாராகவே நம்முடைய நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவ்வையாருக்கு ஒரு தோற்றம் இருக்கும் என்றால் அதை இப்படித்தான் இருக்கும் என்று பலரும் யோசித்து வைத்திருக்கக்கூடிய ஒரு உருவம் தான் கே பி சுந்தராம்பாள்.

இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.. கொடுமுடி கோகிலம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த கலை பொக்கிஷத்தை பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான அடக்கிய பதிவுதான் இது.

இவர் கொடுமுடியில் வாழ்ந்த வீடு இது…

இது அவர் கட்டிய தியேட்டர்..

இது அவர் பயன்படுத்திய பொருட்கள்..

ஒரு கலை பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய இவருடைய வீடு மற்றும் பயன்படுத்திய பொருட்கள் இவருடைய இறப்புக்கு பிறகு இவருக்கு வாரிசு இல்லாத காரணத்தினால் இவருடைய உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

இவருடைய உறவினர்கள் பாகப்பிரிவினை செய்கிறேன் என்ற பெயரில் அவருடைய வீட்டையே இரண்டாக பிரித்து நடுவில் சுவரமைத்து இருக்கின்றனர். இவருடைய வீட்டின் ஒரு பகுதியில் அரசு அலுவலகம் மற்றும் இயங்கி வருகிறது. அரசாங்கம் வாடகை கொடுத்து இதனை இயக்கி கொண்டிருக்கின்றது.

கே பி சுந்தராம்பாள் அவருடைய அப்பாவின் பெயர் கிருஷ்ணசுவாமி. இவருடைய அம்மாவின் பெயர் பாலாம்பாள். ஒரு சகோதரரும் இருக்கிறார் அவர் பெயர் கனக சபாபதி. இவர் திருமுடி கவுண்டர் என்ற வகுப்பை சேர்ந்தவர். இது கொங்கு வெள்ளாளர் சாதியின் உட்பிரிவு ஆகும்.

கேபி சுந்தராம்பாள் அவருடைய தந்தை சிறு வயதிலேயே இறந்து விட்ட காரணத்தினால் மிகவும் வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டது கே பி சுந்தராம்பாள் குடும்பம்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தின் வயிற்று பிழைப்புக்காக பொது இடங்கள் ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் என பாடல் பாடி அதன் மூலம் கிடைத்த சொற்ப வருமானம் மூலம் வாழ்க்கையை நகர்த்தி வந்திருக்கிறார்.

அப்படி பொது இடங்களில் பாடல் பாடிக் கொண்டிருந்த இவரை நாடக சபா நடத்தக்கூடிய ஒருவர் கவனித்து அவருக்கு நாடக கம்பெனியில் வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகு நாடகங்களில் நடித்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்து இருக்கிறார் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று நாடகம் செய்து கொண்டிருந்த கே பி சுந்தராம்பாள் வீட்டிற்கு வருவதற்கே நேரம் இல்லாத காரணத்தினால்.. அவருடைய குடும்பத்தை நீண்ட காலம் பிரிந்து இருக்கிறார்.

ஒரு முறை தன்னுடைய மகள் எங்கே தன்னுடைய மகளின் நாடகம் எங்கே நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அங்கே சென்ற அவருடைய அம்மா அவரை பார்த்து இருக்கிறார்.

தன்னுடைய அம்மாவை பார்த்து சந்தோஷத்தில் தான் நாடகத்தில் நடித்து சம்பாதித்து வைத்திருந்த 100 சவரன் நகைகளை கொடுத்து அனுப்பி இருக்கிறார் கே பி சுந்தராம்பாள்.

நாடகத்தில் நடிக்கும் பொழுது தன்னுடன் நடித்த சக நடிகர் கிட்டப்பா என்பவருடன் காதல் வயப்பட்ட கே பி சுந்தராம்பாள் அவரையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தை பிறந்து இறந்து இருக்கிறது. இவர் திருமணம் செய்து கொண்ட கிட்டப்பா என்பவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறந்து இறந்தது மற்றும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்ற காரணங்களினால் கே பி சுந்தராம்பாளை பிரிந்து மீண்டும் தன்னுடைய முதல் மனைவியிடம் தஞ்சம் புகுந்தார் கிட்டப்பா.

அதீத போதைப்பழக்கம், மதுவுக்கு அடிமையான காரணத்தினால் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் கிட்டப்பா. அவர் இறக்கும்போது அவருடைய வயது வெறும் 28 தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் இறக்கும்போது கே பி சுந்தராம்பாள் வயது வெறும் 25 தான்.

தன்னுடைய கணவர் தன்னை விட்டு பிரிந்து விட்டாலும் அவர் மீது கொண்டிருக்கும் அதீத காதல் காரணமாக அவருடைய மறைவுக்கு பிறகு நாடகங்களில் நடிப்பதை தவிர்த்தார் கே பி சுந்தராம்பாள். பொதுவெளியில் தோன்றுவதையே தவிர்த்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மீண்டும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மீண்டும் அவருக்கு புகழ் கிடைக்க ஆரம்பித்தது. ஆனால் வேறு எந்த ஆண்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்ற கொள்கையோடு இருந்த இவர் நாடகங்களில் காதலன் காதலி, தோழன் தோழி, கணவன் மனைவி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிக்க மறுத்தார்.

தனி கதாபாத்திரங்களாக குணசத்திர கதாபாத்திரங்கள், ஆண் கதாபாத்திரமாக இருந்தாலும் தனி கதாபாத்திரம் ஏற்று நடித்து கொண்டிருந்தார். இப்படி ஒரு கொள்கையோடு பயணித்து வந்திருக்கிறார் கே பி சுந்தராம்பாள்.

இப்படி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் ஒரு முறை பக்த நந்தனார் என்ற நாடகத்தில் ஆண் வேடமிட்டு நடித்திருக்கிறார். இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நாடகமாக இருந்திருக்கிறது.

இதனைப் பார்த்து சினிமா இயக்குனர் ஒருவர் இந்த பக்த நந்தனார் நாடகத்தை சினிமாவாக முயற்சி செய்து இருக்கிறார். இதில் கே பி சுந்தராம்பாள் நடிக்கும் படி கேட்டு இருக்கிறார்.

ஆனால், திரைப்படங்களில் நடிக்க மறுத்துள்ளார் கே பி சுந்தராம்பாள். ஆனாலும் இயக்குனர் விடுவதாக இல்லை. எப்படி இவரை தவிர்ப்பது என தெரியாமல்.. ஒரு கட்டத்தில் சரி ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கறீங்களா.. நடிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார் கேபி சுந்தராம்பாள்.

அந்த இயக்குனரும் சரி கொடுக்கிறேன் என கூறி கே பி சுந்தராம்பாளை நடிக்க வைத்திருக்கிறார். அந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 3 லட்ச ரூபாய் தான். ஆனால் கே பி சுந்தராம்பாள் சம்பளம் மட்டும் 1 லட்சம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

முதன்முதலாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற ஒரு நடிகை என்றால் அது கே பி சுந்தராம்பாள் தான். அது அந்த நேரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்தது. அதன் பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால், கெடு வாய்ப்பாக இவர் 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்த பக்த நந்தனார் என்ற நாடகம் என்ற திரைப்படம் தோல்வி அடைந்தது. என்ன காரணம் என்றால் இதே கதையோடு அந்த படம் வெளியாகுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு படம் வெளியாகி இருக்கிறது.

இதுவும் இந்த படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கியவர் பல கோடிகளுக்கு அதிபதியானார். திரையரங்கு ஒன்றை கட்டினார்.

அந்த திரையரங்கிற்கு நடிகர் எம் ஜி ஆர், கலைஞர் கருணாநிதி, நடிகை ஜெயலலிதா ஆகியோர் அந்த திரையரங்கம் திறப்பு விழாவுக்கு சென்று சிறப்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த திரையரங்கம் செயல்பாட்டில் இல்லை. அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்ற வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு முறை கலைஞர் கருணாநிதி இயக்கத்தில் வெளியான பூம்புகார் திரைப்படத்தில் கே பி சுந்தராம்பாள் நடிக்க கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், கருணாநிதி கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர். அவருடைய படத்தில் நான் நடிப்பது என் அப்பன் முருகனுக்கு செய்யும் அவமரியாதை என திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார் கே பி சுந்தராம்பாள்.

ஆனால், கலைஞர் கருணாநிதி அவர்கள் கே பி சுந்தராம்பள்ளிடம் சென்று நீங்கள் பயப்பட கூடிய வகையில் எந்த காட்சியும் இந்த படத்தில் இடம் பெறாது என விரிவாக எடுத்துக் கூறி இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version