என்னடா சொல்றீங்க.. கீர்த்தி சுரேஷ்க்கு ரெண்டு கல்யாணமா? மிரள விடும் தகவல்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொள்ளக்கூடிய நிலையில் இரண்டு மத முறைப்படி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருவது குறித்த பதிவு.

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிற செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் இவர் திருமணம் குறித்து வெளிவந்திருக்கும் செய்தி தற்போது அனைவரும் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழை பொறுத்தவரை நடிகை கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்ததோடு உன் மேல ஒரு கண்ணு பாடலில் செமையாக எக்ஸ்பிரஷன் செய்து ரசிகர்களை மனதில் இடம் பிடித்தார். 

என்னடா சொல்றீங்க.. கீர்த்தி சுரேஷ்க்கு ரெண்டு கல்யாணமா?

இதைத்தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக தமிழ் வாய்ப்புக்கள் வர விஜய்யுடன் பைரவா, சர்க்கார், விக்ரமுடன் சாமி 2, தனுஷ் உடன் தொடரி மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார். 

இந்நிலையில் தெலுங்கு திரைப்படமான மகாநடி திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் அவருக்கு ரீ என்ட்ரி ஆக அமைந்தது. 

இதற்கு காரணம் சில காலங்களாகவே தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இதனை அடுத்து மீண்டும் மாமன்னனுக்கு பிறகு சைரன் படத்தில் நடித்து அது தோல்வியை தந்ததை அடுத்து ரகு தாத்தா படம் வெளிவந்தது அந்த படமும் சொல்லிக் கொள்ளும் வெற்றியை தரவில்லை. 

மிரள விடும் தகவல்..

இந்நிலையில் தற்போது ரிவால்வர் ரீட்டா, பேபி ஜான் போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளிவர உள்ளது. இதை அடுத்து அனைவரும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். 

இந்நிலையில் இவர்  15 ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண்டனி என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள போகக்கூடிய தகவல் இணையத்தில் வெளிவந்தது. 

மேலும் இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நடக்கும் அதுவும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு கீர்த்தி சுரேஷ் கூறியதை அடுத்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு திருமணத்திற்கு பிறகும் இவர் திரைப்படங்களின் நடிப்பார் என்று சொல்லப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவல் படி கீர்த்தி சுரேஷ் மதம் மாறப்போவதாகவும் இருவரது திருமணமும் கிறிஸ்துவ முறைப்படி நடக்கும் என்று சொல்லப்பட்டது.

 இந்நிலையில் திருமணம் குறித்து புதிய அப்டேட்டான தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி கீர்த்தி மதம் மாறவில்லை என்றும் டிசம்பர் 12-ஆம் தேதி காலை இந்து முறைப்படி திருமணம் நடக்கும் அன்று தின மாலையில் தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடக்கும் என தெரியவந்துள்ளது.

Summary in English: Keerthy Suresh is all set to tie the knot, and it’s going to be a beautiful blend of traditions! The talented actress will be getting married in both Christian and Hindu rituals, making her big day a true celebration of love and culture. Fans are buzzing with excitement as they anticipate the unique fusion of ceremonies that reflect her heritage.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version