எனக்கு ஒரு பையனை பிடிச்சா.. நேரா போய் கேட்பேன்.. அதை பண்ணியும் இருக்கேன்.. லட்சுமி மேனன் ஓப்பன் டாக்..!

நடிகை லட்சுமிமேனன் தமிழில் சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், சுந்தர பாண்டியன் படத்திற்கு பிறகு இவர் நடித்த கும்கி திரைப்படம் முதலில் ரிலீஸ் ஆனது.

இதனால் பலரும் நடிகை லட்சுமிமேனனின் முதல் படம் கும்கி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த லட்சுமிமேனன் ஒரு கட்டத்தில் தன்னுடைய படிப்பை மேற்கொள்வதற்காக சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு தன்னுடைய சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று விட்டார்.

ஆனால், படிப்பை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்து அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு காலத்தில் நடிகை லட்சுமிமேனன் நடித்த அந்த படத்தில் அந்த படம் வெற்றி பெறும் என்ற பேச்சு இருந்தது.

ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. இதனால் இவருடைய மார்க்கெட் சரிந்தது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட இவரிடம் உங்களிடம் யாராவது வந்து காதலை சொல்லி இருக்கிறார்களா..?

உங்களால் மறக்க முடியாத ப்ரொபோசல் அனுபவம் ஏதாவது இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த லட்சுமி மேனன் என்னிடம் யாரும் காதல் சொன்னது கிடையாது.

நான் தான் சொல்லி இருக்கிறேன். எனக்கு யாரையாவது பிடித்திருந்தால்.. நேராக சென்று அவரிடம் விஷயத்தை சொல்லி விடுவேன்.. நான் உங்களை காதலிக்கிறேன் உங்கள் எனக்கு பிடித்திருக்கிறது என நேரடியாக சொல்லி விடுவேன்.

அதனை செய்தும் இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். அவருடன் தொலைபேசியில் பேசுவது.. அரட்டை அடிப்பது.. இதைத் தாண்டி வேறு எதையும் செய்தது கிடையாது.

ஒருமுறை இரவு நேரத்தில் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு அவருக்கு மெசேஜ் செய்து கொண்டிருந்தேன்.

போர்வைக்குள் இருந்த வந்த வெளிச்சத்தை பார்த்து என்னுடைய அம்மா என்னை கையும் களவுமாக பிடித்து விட்டார்.

அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு அப்படியான விஷயங்களுக்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை என கூறினார் நடிகை லட்சுமி மேனன்.

Summary in English : Actress Lakshmi Menon recently opened up about her school love experience, and it’s as relatable as it gets! She shared some sweet and funny anecdotes from her younger days, reminiscing about those innocent crushes that made school life a little more exciting.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version