லால் சலாம் கொடுத்த லாபத்தை கூட வாரிசு தரலயா..? சொன்னது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

சொன்னது வேற யாருமில்லீங்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவே தான். போற போக்கில் ஒரு குண்டை தூக்கிப்போட்டு போயிருக்கிறார் தில் ராஜு.

இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக நடிகர் விஜயின் சினிமா பயணம் கிட்டதட்ட முடிவடைகிறது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியே வந்த வாரிசு திரைப்படம் தனக்கு தோல்வி படமாக அமைந்தது என்பதை மறைமுகமாக சொல்லும் விதமாக தில் ராஜு பேசியுள்ளார்.

நான் தயாரித்த கடைசி சில படங்கள் கடுமையான தோல்வி அடைந்தன. அதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. கேம் சேஞ்சர் திரைப்படம் எனக்கு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கக்கூடிய ஒரு கம்பேக் திரைப்படம் என பேசியிருந்தார்.

அவர் அப்படி பேசியது தான் குத்தம். உடனே, இதனுடைய உள்ள அர்த்தம் இதுதான் என இணைய பக்கங்களில் ஆளாளுக்கு பேச ஆரம்பித்து விட்டார்கள்.

குறிப்பாக நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தை சுட்டிக்காட்டி தான் தில் ராஜு இப்படி பேசி இருக்கிறார் என்று சமூக வலைதள பக்கங்களில் நடிகர் விஜய்க்கு எதிராக இருக்கக்கூடிய சில நடிகர்களின் ரசிகர்கள்.. சில குறிப்பிட்ட கட்சிகளின் தொண்டர்கள் என இந்த வீடியோவை வைரலாக்கி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறார்கள்.

கடந்த வருடம் உண்மையாக அடி வாங்கியது யார் என்று கேட்டால் லைகா தயாரிப்பு நிறுவனம் தான். ரசிகர்களே லைகா நிறுவனம் மீது பரிதாபம் கொள்ளும் அளவுக்கு திரும்ப, திரும்ப அடி வாங்கியது லைகா நிறுவனம்.

அந்த நிறுவனமே பொதுவெளியில் எங்கும் நாங்கள் நஷ்டம் அடைந்தோம் என்று பதிவு செய்யவில்லை. ஆனால், தில்ராஜு எதற்காக இப்படி பொதுவெளியில் வந்து புலம்புகிறார்.. அப்படி என்றால் லால் சலாம் படத்தின் மூலம் லைகா நிறுவனம் பெற்ற லாபத்தை கூட வாரிசு படம் மூலம் தில் ராஜு பெறவில்லையா.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Recently, producer Dil Raju stirred up quite the conversation on the internet when he hinted that he faced losses from Vijay’s much-anticipated film, “Varisu.” Fans and industry insiders alike are buzzing about his comments, speculating on what this could mean for future projects and the overall box office landscape.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version