இப்படி நடக்கும்ன்னு நான் நெனச்சி கூட பாக்கல சாமி.. நடிகர் வடிவேலு கண்ணீர்..!

நடிகர் வடிவேலு சமீபத்திய பேட்டியில் தனக்கு எப்படி வடிவேலு என்ற பெயர் வந்தது என்ற கதையைச் சொல்லி இருக்கிறார். இவருடைய இந்த பதிவு இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் வடிவேலு வருடத்திற்கு 20 படங்கள் என்றாலும் நடித்து அசத்தி கொண்டிருந்தார்.

டாப் ஹீரோக்களுக்கு இல்லாத டிமாண்ட் நடிகர் வடிவேலுக்கு இருந்தது. ஆனால், கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடிகர் வடிவேலுவின் சினிமா வாழ்க்கை தடம் மாறி போய்விட்டது.

நண்பர்கள் சிலரின் பேச்சை கேட்டுக் கொண்டு மற்றும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் அரசியலில் குறிப்பிட்டு நடிகரை பழிவாங்கும் நோக்கத்தில் நுழைந்து தன்னை தானே தாழ்த்திக் கொண்டார். தன் மீது தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டார் நடிகர் வடிவேலு என்பது தான் உண்மை.

தற்போதும் திரைப்படங்களில் அவ்வப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் வடிவேலு என்ற பெயர் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் என்னுடைய அண்ணன் நான் பிறப்பதற்கு முன்பே தவறிவிட்டார். அப்போது மீண்டும் எனக்கு மகன் பிறந்தால் வடிவேல் என பெயர் வைப்பதாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் என்னுடைய அம்மா வேண்டிக் கொண்டார்.

அவர் வேண்டுதல் போலவே ஆண் குழந்தையாக நான் பிறந்தேன். எனக்கு வடிவேல் என்று பெயர் வைத்தார்கள். அப்படி வைத்த பெயர் தான் இன்று உலகம் முழுக்க ஒலிக்கும் ஒரு பெயராக மாறியிருக்கிறது.

இபப்டியெல்லாம் நடக்கும் என என்னுடைய அம்மாவும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். நானும் எதிர்பார்க்கல சாமி.. இதை விட எனக்கு வேற என்ன சந்தோஷம் என கண்ணீர் ததும்ப நா தழுதழுக்க பேசியிருக்கிறார் நடிகர் வடிவேலு.

Summary in English : Legendary comedy actor Vadivelu has a pretty amusing story about how he got his unique name! He shared that his mom had a special prayer at the Thiruparankundram Murugan Temple. She promised that if she was blessed with a baby boy, she’d name him after the beloved deity Vadivelu.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version