போப்பா போ என் பொணத்த தாண்டி போ.. ‘கேம் சேஞ்சர்’ குறுக்கே வந்து விழுந்த லைகா..!

நடந்துள்ள சம்பவத்தை பார்க்கும்போது வேலாயுதம் படத்தில் நடிகர் சந்தானம் போப்பா போ.. என் பொணத்த தாண்டி போ.. என்று கூறும் வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் இன்னும் நான்கு நாட்கள் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இந்த படம் தமிழ்நாட்டில் வெளியாவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியன் 2 படத்திற்கு பிறகு இயக்குனர் சங்கர் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை முடித்துவிட்டார். இயக்குனர் தில்ராஜூ தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு நாடுகளில் இந்த படத்திற்கான புக்கிங் ஆரம்பித்துவிட்டது. ஆனால், தற்போது இந்த படத்தை தமிழில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் லைகா நிறுவனம் என்று கூறப்படுகிறது.

இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்காமல் கேம் சேஞ்சர் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தியன் 3 படத்தை முடிக்க சங்கர் மேலும் 65 கோடி ரூபாய் பட்ஜெட் கேட்பதாகவும் லைகா குற்றச்சாட்டை முன்வைக்கிறது. இந்தியன் 2 படத்தால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மேற்கொண்டு 65 கோடி கேட்டால் எங்களால் கொடுக்க முடியாது என லைகா தரப்பில் முறையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல இந்தியன் திரைப்படத்தில் படமாக்கப்பட வேண்டிய மீதமுள்ள பாடல் மற்றும் காட்சிகளை எடுக்காமல் படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என சங்கர் தரப்பில் திரைத்துறை கூட்டமைப்பினரிடம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக நான்கு நாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் எந்த விதமான சுமுகமான உடன்பாடும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பத்தாம் தேதி தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகுமா..? வெளியாகாதா..? என்ற பிரச்சனை தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.

Summary in English : In the latest buzz around the release of “Game Changer,” it seems that Lyca has managed to stir up some serious trouble for Shankar. Fans are buzzing about how this unexpected twist has added a layer of drama to the film’s rollout.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version