விஷாலுக்கு இது தான் பிரச்சனை..! கை நடுக்கத்திற்கு இது தான் காரணம்..!

மத கஜ ராஜா படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் படத்தை இயக்குனர் சுந்தர் சி, நடிகர் விஷால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. எப்போது வெளியாகும்..? இனிமேல் வெளியாகுமா.. வெளியாகாதா..? என்ற கேள்விகள் எல்லாம் இருந்த நிலையில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸிலிருந்து விலகியதை தொடர்ந்து பொங்கல் அன்று இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்பதில் ஆரம்பித்து தங்களுடைய பழைய நினைவுகளை அசைபோட ஆரம்பித்ததன் விளைவாக மதகஜராஜா படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் கிடைத்தது.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஷால் மேடையில் பேசும்போது கை நடுக்கத்துடன் மிகவும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்.

அவருடைய பழைய ஸ்டைல், நடை, உடை, பாவனை, மிடுக்கு என எதுவுமே இல்லை ஆளே மாறி ஏதோ வயதான நபர் போல நடப்பதும் பேசுவதுமாக ரசிகர்கள் பலரும் அவரை பார்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர்.

அந்த அளவுக்கு நடிகர் விஷாலின் உடல்நிலை இருந்தது. இந்நிலையில், அவருக்கு என்ன ஆனது..? அவருக்கு என்ன பிரச்சனை..? என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதற்கு வருகிறது.

இது குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது விஷாலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு அதிக அளவில் காய்ச்சல் இருக்கிறது. இருந்தாலும் இந்த படத்தின் வெளியீட்டு விழா என்பதால் கஷ்டப்பட்டு வந்தார். அரங்கில் இருந்த அதீத குளிரின் காரணமாக அவருடைய கை நடுங்கியது என்று பட குழு விளக்கம் அளித்து இருக்கிறது.

மறுபுறம் நடிகர் விஷாலுக்கு நரம்பில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாகத்தான் இந்த பிரச்சனை. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இந்த பிரச்சனை சரியாகிவிடும்.

பொதுவாக பலருக்கும் வரக்கூடிய தற்காலிக பிரச்சனை தான் இது. நரம்பில் ஏற்பட்டுள்ள உள்ள தொற்று காரணமாக உறுப்புகள் மற்றும் தசைகளின் அசைவுகளை கட்டுப்படுத்துவதில் ஏற்படக்கூடிய சிரமம் தான் இது. குறித்து விஷால் ரசிகர்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. கூடிய விரைவில் விஷால் பூரண நலம் பெற்று மீண்டும் பழைய மிடுக்குடன் தோன்றுவார் என கூறுகிறார்கள்.

Summary in English : At the Madha Gaja Raja pre-launch event, all eyes were on Vishal, especially when he took the stage with his hand visibly shivering. It was a moment that raised a few eyebrows and sparked some chatter among fans and attendees. The truth is, Vishal was battling a severe fever and cold at the time.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version