150 கோடி சீனாவிற்கே மகாராஜா ஆன மகாராஜா.. பட்டையை கிளப்பும் மக்கள் செல்வன்.. 

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தன் உழைப்பால் மக்கள் செல்வனாக மாறி இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஐம்பதாவது திரைப்படம் மகாராஜா சீனாவில் சக்கை போடு போட்டு வசூலை வாரி வருவது குறித்த தகவல். 

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து மாஸ் படங்களை கொடுத்து வருகின்ற சூழ்நிலையில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மாஸ் வெற்றியை பெற்று தந்தது.

இந்தியாவை அடுத்து சில தினங்களுக்கு முன்பு மகாராஜா திரைப்படம் சீனாவின் ரிலீசாக அலிபாபா நிறுவனம் இந்த படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டது. இந்நிலையில் இந்த படம் சீன ரசிகர்களையும் வெகுவாக வந்து வசூல் வேட்டையில் துவம்சம் செய்துள்ளது. 

150 கோடி சீனாவிற்கே மகாராஜா ஆன மகாராஜா..

அந்த வகையில் கடந்த வார இறுதியில் இந்த படம் 25 கோடி ரூபாய் அளவு கலெக்ஷன் செய்திருந்ததாக தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானதை அடுத்து பீசா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல ரிச்சை கொடுத்தது. 

இதை அடுத்து வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்த விஜய் சேதுபதி வில்லனாக ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், ஷாருக்கான் போன்ற நடிகர்களோடு இணைந்து நடித்து தன்னுடைய வேறு பக்கத்தை காட்டினார். 

மேலும் குரங்கு பொம்மை என்ற வித்தியாசமான படத்தில் தன்னுடைய கவனத்தை ஈர்த்த இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உள்ளது. 

பட்டையை கிளப்பும் மக்கள் செல்வன்.. 

இதை அடுத்து இந்த திரைப்படமானது அப்பா மகள் சென்டிமென்டில் கதையை மிகவும் அற்புதமான முறையில் நகர்த்தியதை அடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நிலையில் சீனாவிலும் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை 110 கோடியும் சீனாவில் 40 கோடியும் வசூல் செய்துள்ள மகாராஜா படம் சீனர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதை அடுத்து ஜப்பானிலும் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ‌

ஏற்கனவே ஜப்பான் நாட்டில் ரஜினியின் படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில் மகாராஜா படமும் ஜப்பானிய ரசிகர்களை கவர்ந்து வசூலை வாரி கொடுக்கும் என்ற நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் பேசும் பொருளாக மாறிவிட்டது. 

Summary in English: Actor Vijay Sethupathi has done it again! His latest film, “Maharaja,” has officially joined the coveted 150 crore club, and fans couldn’t be more thrilled. This movie showcases his incredible talent and versatility, proving once again why he’s one of the most beloved actors in the industry.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version