ரஜினி சாருக்கு இப்படி ஒரு கனெக்‌ஷன் இருக்கும்னு எதிர்பார்க்கல… நம்ம மணிமேகலையா அப்படி சொன்னது? இதுதான் காரணமாம்?.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் மணிமேகலை. இவர் வெகு காலங்களாகவே சின்னத்திரையில் முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். அதே சமயம்  இவருக்கென்று ஒரு ரசிக பட்டாளமும் இருந்து வருகிறது.

மணிமேகலைக்கு சின்னத்திரையில் மட்டுமின்றி பொதுவாகவே ரசிகர்கள் அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம் தான். பொதுவான தொகுப்பாளர்கள் மாதிரி இல்லாமல் தொடர்ந்து நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடியவர் மணிமேகலை.

கனெக்‌ஷன் இருக்கும்னு எதிர்பார்க்கல

இவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்றார் மணிமேகலை. முதல் சீசனில் இருந்து குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளியாக மணிமேகலை இருந்து வந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு வரவேற்புகளும் அதிகரிக்க துவங்கியது தொடர்ந்து சீசன் 5 வரைக்கு குக் வித் கோமாளியில் இருந்து வந்த மணிமேகலை சமீபத்தில்தான் அதிலிருந்து வெளியேறினார்.

அவருக்கும் வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட சண்டை தான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் குக் வித் கோமாளி மட்டுமன்றி மொத்தமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறி இருக்கிறார் மணிமேகலை.

மணிமேகலையா அப்படி சொன்னது

இதனை அடுத்து மணிமேகலை அடுத்து என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்கிற கேள்வி இருந்து வந்தது. மணிமேகலை தொடர்ந்து தனது கணவருடன் நிறைய யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் பேட்டியில் பங்கேற்ற பொழுது நிறைய திரைப்படங்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களை குறிப்பாக வைத்து அதை கண்டுபிடிக்கும்படி கூறினர்.

அப்போது சந்திரமுகி ஜோதிகா மற்றும் பிரபுதேவா பூதம் வேஷம் போட்டிருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த மணிமேகலை கண்டுப்பிடிக்கவே முடியவில்லை என கூறினார். உடனே தொகுப்பாளர் அது ரஜினி என்கிற பெயரைதான் அப்படி வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதுதான் காரணமாம்

சந்திரமுகியில் ஜோதிகா ரா ரா என அழைப்பதையும் ஜீனி என்கிற பூதத்தையும் வைத்துள்ளோம் என அவர்கள் கூறியுள்ளனர். அதை கேட்ட மணிமேகலை ரஜினிக்கு இப்படி ஒரு கனெக்‌ஷன் இருக்கும்னு எதிர்பார்க்கல என கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version