அப்படி தான் சூர்யா படத்தை நாரடிப்போம்.. முடிஞ்சா பாரு.. சீரியல் நடிகர் பரபரப்பு பேச்சு..

சீரியல் நடிகரான ரவி சந்திரன் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அவர் தற்போது சூர்யாவின் படத்தை தொடர்ந்து நாரடிப்போம் என்று பேசிய பேச்சானது வைரல் ஆகி வருகிறது.

இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பிலும் சிறுத்தை சிவா இயக்கத்திலும் நவம்பர் 14ஆம் தேதி ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளி வந்த கங்குவா திரைப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. 

படம் வெளிவருவதற்கு முன்பே சுமார் 2000 கோடி வசூலை வாரி குவிக்கும் என்று பட குழுவின் சார்பில் பலரும் ஏக வசனம் பேசிய நிலையில் படம் வெளிவந்த முதல் நாளே நெகடிவ் விமர்சனங்களை பெற்று பிளாப் ஆனது. 

அப்படி தான் சூர்யா படத்தை நாரடிப்போம்..

இதைத் தொடர்ந்து இந்த படத்தைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் முன் பகுதியில் இடம் பிடித்த சில காட்சிகள் மிகவும் நீளமாக இருப்பதாக ரசிகர் சொன்னதை அடுத்து 12 நிமிடத்தை கட் செய்து விட்டார்கள். 

அதுபோல படத்தில் சத்தம் அதிகமாக இருக்கப்பட்டதை அடுத்து மீண்டும் அது சரி செய்யப்பட்டு வெளி வந்தாலும் முதல் நாள் கிடைத்த நெகட்டிவ் விமர்சனமே தொடர்ந்தது. 

இதை அடுத்து கங்குவா திரையிடப்பட்ட திரைப்படங்கள் காத்து வாங்குகின்ற வேளையில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வதோடு கங்குவா படத்தை பார்க்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள். 

அந்த வகையில் இயக்குனர் சுசிந்தரன் தமிழ் திரை உலகில் கொண்டாடப்பட வேண்டிய படமாக தங்குவாவை குறிப்பிட்டார். இதில் சூர்யாவின் நடிப்பு அபாரமாக உள்ளது எனவே யாரும் அதை தாழ்த்திக் கொண்டாட வேண்டாம் என்ற வேண்டுகோள் விடுத்தார். 

போதாக்குறைக்கு சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் கணவருக்காக வரிந்து கட்டிக்கொண்டு கங்குவா படம் பற்றி விமர்சனங்களை செய்து தனது ஆதரவை வெளியிட்டார். 

இதை அடுத்து பாடகி சுசித்ரா கடுமையான விமர்சனங்கள் செய்ததை அடுத்து அந்த வரிசையில் தற்போது சீரியல் நடிகர் ரவியும் கங்குவா படத்தை பங்கமாக கலாய்த்து இருப்பதோடு சூர்யா ஜோதிகாவின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். 

முடிஞ்சா பாரு.. சீரியல் நடிகர் பரபரப்பு பேச்சு..

இதை அடுத்து அவர் பேசும் போது சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம் என சொன்னதோடு தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சூர்யா இங்கு தரமான கல்வி கிடைக்காத என்று பிள்ளைகளுக்கு தரமான கல்வி கொடுக்க மும்பை போனதாக சொல்லுகிறார்கள்.

இதில் உங்க புள்ளைங்க மட்டும் தரமான பள்ளியில படிக்கணும் ஆனா இங்க இருக்குற மாணவங்க எக்ஸ்ட்ரா ஒரு மொழியை கத்துக்கிட்டா உன் புருஷனுக்கு பொத்துட்டு வந்துடும் என்று ஜோதிகாவிடம் சிரித்துக் கொண்டே கேள்வியை கேட்டு இருக்கிறார். 

அதாவது சூர்யா ஹிந்தி எதிர்ப்புக்கு வன்மையான தனது கண்டனங்களை தொடர்ந்து காட்டிய நிலையில் இந்த பேச்சு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து சீரியல் நடிகர் ரவி நாங்களும் பண்ணுவோம். நாங்களும் செய்வோம் தொடர்ந்து செய்வோம். சூர்யா படத்தை நாரடிப்போம் உங்களால முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க என்று சவால் விடக்கூடிய வகையில் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். 

Summary in English: In the world of Tamil television, there’s always something buzzing, and recently, the spotlight has been on “Marumagal” serial actor Ravi. He didn’t hold back during a recent interview when he threw some shade at superstar Suriya and his wife Jyothika. Ravi expressed his thoughts on how the couple’s off-screen persona sometimes overshadows their work in films.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version