அடுத்த எமோஷனல் ட்ரீட் ரெடி.. 96, மெய்யழகன் படத்தை தொடர்ந்து பிரேம்குமாரின் அடுத்த படம்..

ஊரார் ஒதுக்கி வைத்த ஓவியம் என்னை பொறுத்தவரை காவியம் என்ற சமீபத்திய ட்ரெண்டிங் கேள்விக்கு பெருவாரியான ரசிகர்களின் பதில் மெய்யழகன் என்ற படமாக தான் இருக்கிறது.

நடிகர்கள் கார்த்தி அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் என பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் மெய்யழகன்.

இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வி படமாக மாறியது. ஆனால், இந்த திரைப்படத்தில் இருக்கக்கூடிய உயிரும் உணர்வும் அந்த மோசமான விமர்சனங்களால் மழுங்கடிக்க பட்டது.

இன்று ஒரு படத்தை பார்த்துவிட்டு அதற்கு எதிர்மறையாக விமர்சனத்தை கூறினால் தான் நமக்கு சினிமா அறிவு இருக்கிறது என்பது போல பலர் திரையரங்குக்கு வருகிறார்கள். படத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கோணத்திலேயே முழு படத்தையும் சில ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

அவர்கள் இருக்கக்கூடிய ரசிக்கும் தன்மையே நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என பிரபல நடிகர் ராம்கி தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

அது எந்த படத்திற்கு பொருந்துகிறதோ.. இல்லையோ.. மெய்யழகன் படத்திற்கு கச்சிதமாக பொருந்தும். இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் மைக்கை நீட்டிய போது.. பலரும் இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை பதிவு செய்ததை பார்க்க முடிந்தது.

ஆனால், இந்த படம் OTT தளத்தில் வெளியான பிறகு ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள். அவ்வளவு உணர்வுபூர்வமான, உயிரோடு கலந்த, உண்மைக்கு நெருக்கமான ஒரு அனுபவத்தை திரையரங்கில் தவற விட்டு விட்டோமோ என்று தங்களுடைய பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளருமான சி.பிரேம்குமார் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்.

தமிழில் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, எய்தவன், ஒரு பக்க கதை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘96 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

அதனை தொடர்ந்து அதே படத்தை ஜானு என்ற தலைப்பில் தெலுங்கிலும் இயக்கியிருந்தார். சமீபத்தில் இவர் இயக்கிய படம் தான் . ’96, மெய்யழகன் இந்த இரண்டு திரைப்படங்களுமே உணர்வுகளை கடத்தும் விதமாகவும்.. உயிரோடு கலக்கும் விதமாகவும்.. உண்மைக்கு நெருக்கமான கதைக்களத்துடன் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தை 96 படத்தின் இரண்டாம் பாகமாக இயக்க இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார் என்பது தான் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

இந்த படத்தை ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சிங்கப்பூர் மலேசியாவில் உள்ள இடங்களில் நடக்கும் படியான கதைக்களமாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் முதல் பாகத்தில் வெளிநாட்டிலிருந்து திரிஷா தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களை சந்திப்பதற்காக இந்தியாவுக்கு வருவது போல கதைக்களம் அமைந்திருந்தது.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் இந்த படத்தின் கதை அமைக்கப்படுவதால் விஜய் சேதுபதி அங்கு சென்று அங்கு நடக்கக்கூடிய விஷயங்கள் இந்த படமாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதற்கான விடை விரைவில் தெரிந்து விடும். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version