மழை வெள்ளத்தில்.. ஊழல் அதிகாரிக்கு விருந்து வைத்து.. MGR செய்த மாஸ் சம்பவம்..!

MGR reportedly hosted a treat for a corrupt officer at the Hotel prior to issuing a suspension order.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது ஒரு முறை மழை வெள்ளம் ஏற்பட்டு ராமாவரம் தோட்டத்தில் தண்ணீர் புகுந்து விடுகிறது.

எம்ஜிஆர் படகில் ஏறி வந்து ConneMara ஹோட்டலில் தங்குகிறார். ஒரு மாதத்திற்கு ஹோட்டல் தான் அரசு அலுவலகமாக செயல்படுகிறது. அப்போது ஒரு அதிகாரி செய்த செயலால் எம்ஜிஆருக்கு அவப்பெயரும் அரசுக்கு அவமானமும் ஏற்படுகிறது. 

இதனால் கடுப்பான அவர் அவருக்கு சஸ்பெண்ட் ஆர்டரை எடுத்து வைத்துக்கொண்டு அவரை வரச் சொல்லி இருக்கிறார். 

அவர் வந்ததும் அவருடைய முகத்தில் இந்த சஸ்பெண்ட் ஆர்டரை வீசி அனுப்ப காத்திருக்கிறார். அந்த அதிகாரி மதியம் ஒரு மணிக்கு வருகிறார்.

அதே நேரத்தில் எம்ஜிஆருக்கு மதிய உணவும் வருகிறது. அப்போது அந்த அதிகாரியை பார்த்த எம் ஜி ஆர் சாப்பிட்டீங்களா..? என்று கேட்கிறார். 

அவரும்.. சாப்பிட்டேன் என்று கூறுகிறார். ஆனால், அவர் பொய் சொல்கிறார் என்பதை அவருடைய முகத்தை பார்த்து தெரிந்து கொள்கிறார் எம்ஜிஆர். 

நீங்க முதலில் சாப்பிடுங்க என்று கூறுகிறார். அவர் வேண்டாம் என மறுக்கவே.. இப்பொழுது நீங்கள் சாப்பிட போறீங்களா..? இல்லையா..? என்று அவரை அதட்டுகிறார். 

அதன் பிறகு அந்த அதிகாரி சாப்பிடுகிறார். வழக்கம்போல பரிமாறுபவர்களிடம் சொல்லி அதை வை.. இதை வை வை என்று கூறுகிறார். 

சாப்பிட்டு முடித்த பிறகு தன்னுடைய அறைக்கு செல்கிறார் எம்ஜிஆர். சில நிமிடங்கள் கழித்து அறைக்குள் நுழைகிறார் அந்த அதிகாரி. 

வந்ததும் கையில் வைத்திருந்த சஸ்பெண்ட் ஆர்டரை அந்த அதிகாரியின் முகத்தில் வீசுகிறார். என் முகத்தில் இனிமேல் முழிக்காதீர்கள் என்று கூறி அனுப்புகிறார். 

சட்டப்படியும் அதே நேரம் தர்மபுடியும் ஒரு விஷயத்தை அணுகக் கூடியவர் எம்ஜிஆர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

Summary in English : On a occasion, MGR reportedly hosted a lavish treat for a corrupt officer at the prestigious Connemara Hotel prior to issuing a suspension order.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version