ஊழல் அதிகாரியை நேரில் வரவைத்து எம்.ஜி.ஆர் செய்த மாஸ் சம்பவம்..!

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடலை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம்.


எனினும் தமிழக மக்கள் மத்தியில் இந்த மூன்றெழுத்து மந்திரம் அவர்கள் இதயம் துடிக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருக்கக்கூடிய ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது தெய்வமாகவே ஒவ்வொரு வரும் எம்ஜிஆர் போற்றி புகழ் பாடி வருகிறார்கள்.

ஊழல் அதிகாரியை நேரில் வரவைத்து..

அந்த வகையில் நடிகர் எம் ஜி ஆர் திரைப்படத்துறை மட்டுமல்லாமல் தான் களம் கண்ட அரசியல் துறையிலும் மக்களுக்காக பல்வேறு நல்ல விஷயங்களை செய்து மக்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் முதல்வராக இருந்த சமயத்தில் ராமாபுரம் தோட்டத்தில் மழை வெள்ளம் அதிக அளவு புகுந்து விடுகிறது. இந்த சூழ்நிலையில் எம்ஜிஆர் படகில் ஏறி வந்து அங்கு இருந்த கன்னிமாரா ஹோட்டலில் தங்கி விடுகிறார்.

இந்த ஹோட்டலை ஒரு மாதமாக தலைமை செயலகமாக செயல்பட்டு அரசாங்க பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்றது. அந்த சமயத்தில் அரசு அதிகாரி ஒருவர் செய்த தவறால் எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய கறை ஏற்பட்டு விட்டது.

அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் கட்சி குறித்தும் பல்வேறு வகையான கருத்து விமர்சனங்கள் நெகட்டிவாக இருந்ததை அடுத்து அவமானம் ஏற்பட்டு விட்டது. இதனை அடுத்து உச்சகட்ட கோபத்திற்கு உள்ளான முதல்வர் எம்ஜிஆர் சஸ்பெண்ட் ஆர்டரை அடித்து கையில் வைத்துக்கொண்டு அந்த ஊழல் அதிகாரியை தன்னை பார்க்க நேரில் வரச் சொன்னார்.

எம்.ஜி.ஆர் செய்த மாஸ் சம்பவம்..

இதை அடுத்து அவருக்கு இருந்த கோபத்தில் அந்த அதிகாரி வந்தால் இந்த சஸ்பெண்ட் ஆர்டரை அவர் முகத்தில் விட்டேறிய வேண்டும் என்று காத்திருந்தார். அந்த அதிகாரியும் மதியம் ஒரு மணி போல வந்திருக்கிறார்.

மதிய வேலை என்பதால் முதல்வர் எம்ஜிஆர் க்கு மதிய உணவு டிபன் கேரியரில் வந்து இறங்குகிறது. இதை அடுத்து எம்.ஜி.ஆர் அந்த அதிகாரியின் முகத்தை பார்த்து சாப்பிட்டீங்களா? என்று கேட்கிறார்.

மனிதத் தன்மையோடு அவர் கேட்டதை அடுத்து அந்த அதிகாரியும் நான் சாப்பிட்டு விட்டேன் என்று சொல்ல அவர் பொய் சொல்கிறார் என்ற விஷயத்தை அவர் முகத்தை பார்த்ததுமே கணித்து விடுகின்ற எம்ஜிஆர் பொய் சொல்றீங்க போய் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டார்.

எனினும் அந்த அதிகாரியோ இருந்த பயத்தில் வேண்டாம் என்று சொல்ல உடனடியாக எம்.ஜி.ஆர் மிரட்டும் தொனியில் இப்ப சாப்பிட போகிறீர்களா? என்ன என்று கேட்டுவிட்டார். இதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அந்த அதிகாரி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்.

எப்போதும் போல எம்ஜிஆர் பரிமாறக்கூடிய நபர்களிடம் அதை வை இதை வை என்று அந்த ஊழல் அதிகாரிக்கு பரிமாறும் போது பக்குவமாக ஒவ்வொன்றையும் வைக்க சொன்னதை அடுத்து அந்த அதிகாரியும் மென்று முழுங்கினார்.

இதை அடுத்து சாப்பிட்டு முடித்த பிறகு எம்ஜிஆர் தனது அறைக்கு வர சொல்ல அவரும் அந்த அறைக்கு செல்கிறார். இதனை அடுத்து கோபம் கொண்ட எம்.ஜி.ஆர் அந்த சஸ்பெண்ட் ஆர்டரை அவர் முகத்தில் விட்டெறிந்து இனி மேல் என் முகத்தில் முழிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இதை அடுத்து அதை ஏற்றுக் கொண்டு அந்த அதிகாரி வெளியே செல்கிறார். சட்டப்படியும் தர்மப்படியும் மனித நேயத்துடனும் நடந்து கொள்ளத் தெரிந்தவர் எம்ஜிஆர் ஒருவரே என்பதை இந்த சம்பவம் மக்களுக்கு மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைக்க கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version