இது புது ஆயுதமா இருக்கே..! வெளியானது நயன்தாராவின் “Raakkayie” டீசர்..! இதை கவனிச்சீங்களா..?

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ராக்காயி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த டீசரில் குழந்தையுடன் தனியாக இருக்கும் தாயாக நடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா. ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு பெரும் படையை நடிகை நயன்தாராவை தாக்குவதற்காக வருகின்றது.

இந்த மிகப்பெரிய படையை தனியாளாக எப்படி சமாளிக்கிறார்..? என்று டீசரில் காட்டி இருக்கிறார்கள்.

டீசர் தொடக்கத்தில் காய்ந்த மிளகாய்களை உறலில் போட்டு மங்கு மங்கு என குத்திக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தன்னுடைய குழந்தைக்கு பால் ஊட்டுகிறார்.

தொடர்ந்து வெளியே தன்னை தாக்க வந்திருக்கும் எதிரிகள் முன்பு கத்தி கம்புடன் நிற்கும் நடிகை நயன்தாரா சிலரை கத்திக்கம்பால் அடித்து துவம்சம் செய்கிறார்.

அதன் பிறகு மிகப்பெரிய படையுடன் நின்று கொண்டிருக்கும் தலைவரை நோக்கி தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் அரைத்த மிளகாய் பொடியை எடுத்து தூவுகிறார்.

அந்த மிளகாய் பொடியின் நெடியுடன் “ராக்காயி” என்ற படத்தின் தலைப்பும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், ஒரு பெரும் படையை வரும் மிளகாய் பொடி கொண்டு அடித்து துவம்சம் செய்கிறார் நடிகை நயன்தாரா. இது புது ஆயுதமா இருக்கே..? என்று கருத்துக்களும் பதிவிட்டு வருகிறார்கள்.

Summary in English : The buzz is real, folks! The teaser for Nayanthara’s much-anticipated movie “Raakkayie” just dropped, and it’s taking the internet by storm. Fans are going wild with excitement as they catch a glimpse of our favorite actress in action.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version