பேசிகிட்டே இருக்காரு விஜய் சேதுபதி.. நல்ல வேளை Part 3 இல்ல.. விடுதலை 2 விமர்சனம்..!

Cheyyar Balu, the well-known journalist, recently shared his thoughts on the much-anticipated movie “Viduthalai 2,” and let’s just say, he didn’t hold back!

நடிகர் சூரி இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த வருடம் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு பெரிய இயக்கத்தின் தலைவராகவும் காவல்துறையால் நெருங்க கூட முடியாத அளவுக்கு பாதுகாப்பானாகவும் இருக்கிறார்.

ஆனால், கடைசியில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்… ஒரு போலீஸ் டிரைவர் கையால் விஜய் சேதுபதி சிறைபிடிக்கப்படுகிறார். அந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்திருந்தவர் நடிகர் சூரி.

பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கம் தனிப்படை அமைத்து வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியை சிறை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

மிகப்பெரிய தனிப்படை குழு அமைத்து விஜய் சேதுபதியை தேடியும் கிடைக்காத நிலையில் அந்த ஊர் மக்களுடன் நெருக்கமாக இருக்கும் சூரி அவர்கள் மூலம் கிடைத்த தகவலை வைத்து விஜய் சேதுபதியின் இடத்தை அறிந்து கொள்கிறார்.

ஆனால், ஊர் மக்கள் மற்றும் விஜய் சேதுபதியின் மீது இருந்த நல்லெண்ணம் காரணமாக வேண்டுமென்றே விஜய் சேதுபதி இருக்கும் இடத்தை மறைக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி இருக்கும் இடத்தை சொன்னால்தான் தனக்கு வேண்டியவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து வெளி வருவார்கள் என்ற நிலையில் வேறு வழியே இல்ல்லாமல் விஜய் சேதுபதியை பிடித்தாக வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி காண்கிறார் சூரி. இப்படியாக விடுதலை படத்தின் முதல் பாகம் முடிந்தது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது விடுதலை படத்தின் முதல் பாகம். இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தை பார்த்த பிரபல சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான திரு செய்யார் பாலு அவர்கள் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, படம் தொடங்கியதிலிருந்து முதல் பாதியில் நடிகர் விஜய் சேதுபதி எதனால் ஒரு வாத்தியாராக இருந்து ஒரு போராளியாக மக்கள் தலைவனாக உருவெடுக்கிறார். எதற்காக ஒரு வாத்தியார் போராட்ட களத்திற்கு வரவேண்டும் என்பதை காட்டியிருக்கிறார்கள்.

ஆனால், முதல் பாதி ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டும் விதமாக இருக்கிறது. முதல் பாதையில் விஜய் சேதுபதியை கைது செய்து விடுகிறார்கள். அதாவது முதல் பாகத்தின் முந்தைய பகுதி என்ன…? என்பதுதான் இந்த படத்தின் முதல் பாதி முழுதாக காட்டுகிறார்கள்.

அதன்பிறகு தான் நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய கதை ஆரம்பமாகிறது. முதல் பாதி வரை பொறுமையாக இருந்த ரசிகர்கள் இரண்டாவது பாதியில் ஏதாவது ஒரு முக்கியமான திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஒரு கட்டத்தில் படத்தின் கதை மீதும் கதையின் ஓட்டத்தின் மீதும் ஒரு விதமான சலிப்பு ஏற்படுகிறது.

விஜய் சேதுபதி பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தின் ஹீரோயினாக நடித்த நடிகை மஞ்சு வாரியார் எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியாமல் போய்விடுகிறது.

படத்தில் நிறைய விஷயங்கள் திடீர் திடீரென காணாமல் போய்விடுகிறது. நேற்று வரை படத்தின் கடைசியாக 8 நிமிட காட்சிகளை குறைத்தார்கள் என்று கேள்விப்பட்டேன். இன்னுமே ஒரு 15 நிமிட காட்சிகளை குறைத்திருக்கலாம்.

படத்தின் நீளம் குறைவாக இருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. பொதுவாக வெற்றிமாறன் படங்கள் என்றாலே மெதுவாகத்தான் நகரும்… ஒரு கட்டத்தில் ரசிகர்களுடைய ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை தூண்டி அந்த இடத்தில் ஒரு மேஜிக் நடக்கும்.. அப்படி ஒரு மேஜிக் இந்த படத்தில் நடக்கும் நடக்கும் என எதிர்பார்த்து கிளைமாக்ஸ் வரை காத்திருந்தும் அந்த மேஜிக் நடக்கவே இல்லை.

தொடர்ந்து அறிவுரைகளாகவே சொல்லிக் கொண்டிருப்பதால் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டுகிறது. இந்த படத்தை பார்க்கும் நபர்கள் கண்டிப்பாக இந்த படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு திரைக்குச் சென்றால் ஒரு நல்ல புரிதல் கிடைக்கும்.

இல்லையென்றால் என்ன நடக்கிறது என்பது சுத்தமாக புரியாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக விடுதலை முதல் பாகம் படத்தின் எதிர்பார்ப்பை மனதில் வைத்துக்கொண்டு சென்ற ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் திருப்தி அளிக்கவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. நல்ல வேளையாக, இந்த படத்தின் மூன்றாம் பாகம் இல்லை என்பது வரை மகிழ்ச்சி என பதிவு செய்திருக்கிறார் செய்யார் பாலு அவர்கள்.

Summary in English : If you’re looking for an honest take on “Viduthalai 2,” you’ve got to check out journalist Cheyyar Balu’s review. He dives deep into the film’s themes, characters, and overall impact. Balu highlights how the movie captures the essence of its storyline with powerful performances and stunning visuals that keep you hooked from start to finish.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version