அதை கொடுக்க மறுத்த MGR..! மேடையிலேயே ரவுசு பண்ணிய நம்பியார்..!

MGR என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் எம் ஜி ராமச்சந்திரன் ஒரு புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்தவர்.

இவரைப் போலவே மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்று பெயர் கொண்ட எம் என் நம்பியார் தமிழ் திரை உலகில் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்த அனுபவம் கொண்டவர். இவர் குணச்சித்திர வேடம் மட்டுமல்லாமல் ஆன்ட்டி ஹீரோவாக பல படங்களில் நடித்து எம்ஜிஆர்க்கு நிகரான ரசிகர்களை பெற்றவர்.

அதை கொடுக்க மறுத்த MGR..

இந்நிலையில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜியும் சத்யராஜும் இணைந்து நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படம் பற்றி உங்கள் நினைவில் இருக்கும். இந்த திரைப்படம் 100 நாட்கள் தியேட்டரில் ஓடியதை அடுத்து 100 வது நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார் மேலும் அந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பட டெக்னீசியங்கள் இயக்குனர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். அப்போது விழா மேடையில் நடந்த விஷயம் ஒன்று தான் தற்போது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வகையில் விழா மேடையில் 1987 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது இந்த நூறாவது வெற்றி விழா ஜல்லிக்கட்டு திரைப்படத்திற்காக கொண்டாடப்பட்டது. இந்த விழா வள்ளுவர் கோட்டத்தில் சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் திரைப்பட கலைஞர்களும், திரைப்பட விநியோகிஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் திரைத்துறை சார்ந்த அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். அந்த வகையில் நடிகர் நம்பியார் மேடையில் எம்ஜிஆர் இடம் முத்தம் கேட்க அதை எம்ஜிஆர் கொடுக்க மறுத்த சம்பவம் வீடியோவாக வெளி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேடையிலேயே ரவுசு பண்ணிய நம்பியார்..

மேலும் இந்த நூறாவது நாள் விழாவில் அனைவருக்கும் கேடயம் வழங்கும் நிகழ்வு நடந்ததை எடுத்து நம்பியாருக்கு கேடகத்தை வழங்கிய சமயத்தில் நம்பியார் எம்ஜிஆர் இடம் முத்தம் தருமாறு கன்னத்தைக் காட்டி கேட்டிருக்கிறார். அதற்கு தர முடியாது என்று அவர் வழியில் எம்ஜிஆர் சிரித்தபடியே சொல்லி சேரில் அமர்ந்து விட்டார்.

எனினும் நம்பியார் விடாப்பிடியாக விழா மேடை என்று கூட பார்க்காமல் அந்த இடத்தில் ரவுசு பண்ணிய நம்பியார் கடைசியாக எம்ஜிஆரிடமிருந்து முத்தத்தை பெற்றுக் கொண்டு தான் அமர்ந்தார் இதை அருகில் இருந்த சிவாஜி நட்போடு பார்த்தது மட்டுமல்லாமல் சிரித்து நக்கலாக கலாய்த்து இருக்கக்கூடிய வீடியோ வெளி வந்துள்ளது.

இதை ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய நடிகர் என்றாலும் குழந்தைத்தனமாக எம்ஜிஆர் இடம் போராடி மொத்தத்தை பெற்றதை பற்றி அவர்கள் நண்பர்களோடு இணைந்து பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version