“போட வேண்டாம்ன்னு சொல்லியும் போட்டாங்க..” பிச்சை எடுத்தேன்.. நயன்தாராவின் உலகலெவல் உருட்டு..!

நடிகை நயன்தாரா சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்காக நான் பிச்சை எடுத்து இருக்கிறேன் என்று பேசி இருக்கக்கூடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் உலகத்தரமா உருட்டுறீங்களே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ டாக்குமெண்டரி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இதனை சுற்றி எழுந்த சர்ச்சைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதனை தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் நடிகை நயன்தாரா.

அந்த வகையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் நான் பணியாற்றிய தயாரிப்பாளர்களிடம் இயக்குனர்களிடம் நான் எந்தெந்த படங்களில் பணியாற்றினாலும் அத்தனை படங்களிலும் என்னுடைய பெயருக்கு முன்னால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை போட வேண்டாம் என நான் பிச்சை எடுத்து இருக்கிறேன்.

ஆனால், நான் போட வேண்டாம் என்று கூறியும் நிறைய படங்களில் போட்டு இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அண்ணாத்த படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவிடமும் தயாரிப்பாளர் இடமும் தன்னுடைய பெயருக்கு முன்னால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் போட வேண்டும் என்று நீங்கள் சொன்னதாக தகவல்கள் வெளியானது.

அப்போது அதனை நீங்கள் மறுத்து எதுவும் கூறவில்லை. ஆனால், இப்போது வந்து நான் லேடி சூப்பர் ஸ்டார் என போட வேண்டாம் என்று பிச்சை எடுத்தேன் என்று பேசுகிறீர்களே.. உலகத்தரமான உருட்டா இருக்கு.. என்று அவருடைய அந்த பேச்சை கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Nayanthara, In a recent interview, she revealed that she actually begged producers and directors not to label her with that tag. Her reasoning? She feels it puts unnecessary pressure on her and creates unrealistic expectations. However, this confession didn’t sit well with some netizens, who quickly took to social media to troll her.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version