சிம்பு மோசக்காரன்.. பிரபுதேவா வேலைக்காரன்.. இத சொல்லத்தான் டாக்குமெண்ட்ரியா..? இதெல்லாம் ஒரு சாதனையா நயன்தாரா..?

நடிகை நயன்தாராவின் கல்யாண கேசட் வீடியோ இன்று வெளியாகி இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த வீடியோவிலும் தங்களுடைய காதல் புராணங்களை பாடிக்கொண்டிருக்கின்றனர் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும்.

இது ஒரு பக்கம் இருக்க.. நடிகை நயன்தாரா அதனுடைய முன்னாள் காதலர்கள் பற்றி பேசிய விஷயம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த விஷயத்தை இப்படி ஒரு வீடியோவில் நடிகை நயன்தாரா தவிர்த்து இருக்க வேண்டும். ஆனால் பேசியிருக்கிறார். ஒருவேளை குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவை பேச சொல்லி இருக்கலாம்.

ஏதாவது சர்ச்சையாக பேசினால் தான் இந்த படம் ஓடும் என்று அவர்கள் நிர்பந்தித்திருக்கலாம். அதற்கு நடிகை நயன்தாரா சம்மதித்து இதனை பேசி இருக்கலாம் என்று பலரும் விவாதித்து வருகிறார்கள்.

அதில் குறிப்பிடும்படியாக நடிகர் பிரபுதேவா குறித்தும் நடிகர் சிம்பு குறித்தும் அவர்களுடைய பெயரை குறிப்பிடாமல் நடிகை நயன்தாரா சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது, நான் தெலுங்கு படம் ஒன்றில் சீதா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ராமராக நடிகர் பாலையா நடித்துக் கொண்டிருந்தார். அந்த படம் தான் என்னுடைய கடைசி படமாக இருக்க வேண்டியது.

அந்த படத்தின் இறுதி நாள் ஷூட்டிங்கில் என்னுடைய மனம் மிகவும் ரணமாக இருந்தது. இனிமேல் திரைப்படங்களில் நடிக்க முடியாது என்ற எண்ணம் என்னை செயல் இழக்க செய்தது.

அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு அதுதான் என்னுடைய கடைசி படம் என்பதால் படக்குழுவில் இருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விட்டு வந்தேன்.

ஆனால், அன்று நான் எடுத்த முடிவு சரியானதா..? என யோசித்தேன். ஏனென்றால் சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற முடிவு என்னுடையதல்ல. நான் காதலித்த ஒரு நபருடையது.

அவருடைய முடிவுக்கு நான் ஏன் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று இது குறித்து அவரிடம் விவாதித்தேன்.

அப்போதுதான் எனக்கான சரியான நபர் அவர் கிடையாது என்பதை உணர்ந்தேன். இன்னும் பல மோசமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். அப்போதே அவருடன் காதலை முறித்துக் கொண்டேன் என கூறினார் நடிகை நயன்தாரா.

அதனை தொடர்ந்து நான் மிகவும் ஆழமாக நம்பிய ஒரு நபர் ஒரு கட்டத்தில் அவருடைய உண்மையான முகம் தெரிந்த பின்பு அவரைப் பிரிந்து விட்டேன்.

ஆனால், அவரை நான் பிரிந்தபோது எல்லோரும் என்ன கேள்வி எழுப்பினார்களே தவிர யாரும் அவரிடம் கேள்வி எழுப்பவில்லை. ஒரு பெண்ணாக இருந்த என்னை துருவி துருவி கேள்வி எழுப்புகிறார்கள். தற்போது வரை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுநாள் வரை அவரிடம் யாரும் இது குறித்து கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை. என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

தன்னுடைய திருமண வைபவம் சார்ந்த ஒரு ஒரு ஆவணப்படமாக இது உருவாகி இருக்கிறது. இதில் இந்த முன்னாள் காதலர்கள் பற்றி எல்லாம் நடிகை நயன்தாரா பேச வேண்டுமா..? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

ஒரு படத்தை ஓட வைப்பதற்காக இப்படியும் புராணங்களை பாடலாமா..? என்று கேள்வி எழுப்புகிறார்கள் ரசிகர்கள். இது குறித்து உங்களுடைய பார்வை என்ன என்பதை பதிவு செய்யலாமே..

Summary in English : In her latest flick, “Nayanthara Beyond the Fairy Tale,” our favorite actress spills some tea about her love life that fans definitely didn’t see coming! It’s not just another rom-com; this movie dives deep into the ups and downs of relationships. Nayanthara opens up about her past love failures, revealing that it’s not all glitz and glam behind the scenes.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version