“நான் பொறந்ததே இதுக்கு தான்டா..” முன்னாள் காதலனை போட்டு பொழந்த நயன்தாரா..!

In a recent interview, the talented actress Nayanthara shared some insightful thoughts on love that really struck a chord.

நடிகை நயன்தாரா சமீபத்தில் சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது குறித்தும் தான் செய்த தவறுகள் குறித்தும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அவர் பேசியதாவது, ஒரு கட்டத்தில் என்னுடைய காதலுக்காக நான் சினிமாவை கைவிட முடிவு செய்தேன். அப்போது எனக்கு இருந்த புரிதல் என்னவென்றால்.. ஒரு பெண்ணாக நமக்கு வேண்டிய சில விஷயங்களை பெறுவதற்காக நாம் சில விஷயங்களை இழந்து தான் ஆக வேண்டும்.

ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்ற புரிதலில் இருந்தேன். ஆனால், அதற்காக எனக்கு வாழ்க்கை கொடுத்த ஒரு விஷயத்தை கைவிட வேண்டுமா..? என்ற ஒரு கேள்வி என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அடுத்தடுத்த நாட்களில் நான் மிகுந்த மன வேதனைக்கு உள்ளானேன். அப்போது நான் எடுத்த முடிவு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது.

அதுதான் நம்முடைய வாழ்க்கை துணைக்காக நாம் மிகவும் நேசிக்கக் கூடிய ஒரு விஷயத்தை தவிர்க்க வேண்டுமா..? அப்படி தவிர்க்க தேவை கிடையாது. நாம் எப்படி இருக்கிறோமோ… அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியவர் தான் ஒரு சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும்.

ஆனால், நம்மை தேர்வு செய்து விட்டு நாமும் அவரை காதலிக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக நம்மிடம் அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது என கண்டிஷன் போடுபவர் எப்படி ஒரு நல்ல வாழ்க்கை துணையாக இருப்பார்.

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் செய்ய வேண்டிய விஷயம் ஒன்றுதான். அதுதான் காத்திருப்பது. நமக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் அவசரம் காட்டக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும்.

அப்படி பொறுமையாக இருந்ததன் மூலம் நான் என்னுடைய கணவராக இயக்குனர் விக்னேஷ் சிவனை பெற்று இருக்கிறேன். எனக்கு பிடித்த விஷயத்தை ஒருவர் செய்யக்கூடாது என சொல்லும் பொழுது நான் இதற்கு அதனை விட்டுக் கொடுக்க வேண்டும்..?

உனக்கு பிடிக்காது என்பதற்காக எனக்கு பிடித்த விஷயத்தை நான் தவிர்க்க வேண்டுமா..? நான் பிறந்ததே இதுகுத்தான்டா.. நான் பிறந்ததே எனக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு தான்.. என்ற புரிதல் எனக்கு கிடைத்தது.

இதனை தொடர்ந்து, நடிகை நயன்தாரா யாரை இப்படி போட்டு பொளக்கிறார் என்ற விவாதம் இணைய பக்கங்களில் கிளம்பியுள்ளது.

Summary in English : In a recent interview, actress Nayanthara shared some heartfelt insights about love that really struck a chord. She boldly stated that there’s no need to accept conditions in the name of love. Love, she believes, should be unconditional—pure and free from any strings attached.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version