பயங்கரமான டார்ச்சர் செய்த நயன்தாரா.. இயக்குனர் கொடுத்த நெத்தியடி பதில்.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்..!

அதாவது நடிகைகள் படங்களில் நடித்து அந்த படம் ஹிட்டான பிறகு பிரபலமாவதெல்லாம் பழைய டிரெண்ட். இப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்றால் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தன்னுடைய பெயர் அடிக்கடி செய்தியில் அடிபடுவது போல பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதுபோலத்தான் நடிகை நயன்தாரா சமீபத்தில் நடிகர் தனுஷ் உடன் ஒரு பஞ்சாயத்தை கூட்டினார். தன்னுடைய திருமணம் சம்பந்தப்பட்ட டாக்குமெண்டரி வீடியோவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

அந்த படத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் சிலவற்றை பயன்படுத்திக் கொள்ள தனுஷ் இடம் அனுமதி கேட்டிருக்கிறார்.

ஆனால், நடிகர் தனுஷ் அதற்கான அனுமதியை தரவில்லை. இதற்கு பின்னால் நிறைய விவகாரங்கள் இருக்கிறது. ஆனால், எதற்கும் சம்பந்தமே இல்லாமல் இதற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார் நடிகை நயன்தாரா.

நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள்.. நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் துணையுடன் சினிமாவில் இருப்பவர் என்பது போல் எல்லாம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

ஒரு தயாரிப்பாளராக நடிகர் தனுஷ் அந்த காட்சிகளை பயன்படுத்த அனுமதிப்பதும் அனுமதிக்காததும் அவருடைய விருப்பம். இதற்கும்.. தானாக வளர்ந்ததற்கும்.. குடும்ப உறுப்பினர்களால் சினிமாவுக்கு வந்தார் தனுஷ் என்பதற்கும் என்ன சம்பந்தம்..? என்று ரசிகர்கள் பலரும் நயன்தாராவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் வலைப்பேச்சு என்ற youtube தளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மூன்று பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டு நடிகை நயன்தாரா பேசியது பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், நயன்தாரா பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் பேசியதாவது, சமீபத்தில் நான் ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்றிருந்தேன்.

அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் அங்கே வந்து இருந்தார். அவர் நயன்தாரா நடித்த இறைவன் படத்தில் வேலை செய்தவர். அவர் என்னிடம் நயன்தாரா பற்றி நிறைய விஷயங்களை பேசினீர்கள்.. ஆனால், இந்த விஷயத்தை எப்படி தவறவிட்டீர்கள்..! என்று எனக்கு தெரியவில்லை என என்னிடம் ஆச்சரியமாக கேட்டார்.

ஒரு புதிய தகவலை என்னிடம் கூறினார். இறைவன் படத்தில் நடிப்பதற்காக 15 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார் நடிகை நயன்தாரா. இந்த 15 நாட்களுக்கும் எட்டு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது.

அவருடைய அசிஸ்டன்ட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம். சூழல் இப்படி இருக்க… இரண்டு நாட்களுக்கு சூட்டிங் வந்த அவர் இயக்குனரை அழைத்து இனி என்னால் காலையில் சூட்டிங் வரமுடியாது.

மதியம் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சூட்டிங்கை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அந்த படத்தில், இருக்கக்கூடிய காட்சிகள் பெரும்பாலும் பகலில் நடக்கக்கூடிய காட்சிகள்.

இதனை உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் எனது சினிமா அனுபவம் என்ன..? உன்னுடைய சினிமா அனுபவம் என்ன..? எனக்கு தெரியாதது.. உனக்கு தெரிந்து விட்டதா..? என்று அந்த உதவி இயக்குனரிடம் சண்டை போட்டு இருக்கிறார்.

வேறு வழியில்லாமல் இயக்குனரும் நடிகை நயன்தாராவுக்கு இசைந்து கொடுத்து படத்தை முடித்து இருக்கிறார். கடைசி நாளில் படக்குழுவுடன் போட்டோ எடுக்க நயன்தாரா விருப்பப்பட்டிருக்கிறார்.

ஆனால், இயக்குனரோ நான் வரவில்லை அவங்களை போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்பச் சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார். நயன்தாராவோ இல்லை அவர் வரும்வரை வெயிட் செய்கிறேன் என்று சொல்லி வெயிட் செய்து இயக்குனர் மற்றும் படங்களுடன் படம் எடுத்துச் சென்று இருக்கிறார்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version