குழந்தையை தனியறையில் போட்டு விட்டு செ** எதிர்பார்க்கும் கணவர்.. கோவத்தில் Gopinath சொன்ன வார்த்தை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் விவாதிக்கப்படும் தலைப்புகள் சுவாரசியமானதும் அதே சமயம் நம்முடைய சிந்தனைகளை தூண்டும் விதமாக அமையும்.

அந்த வகையில் சமீபத்தில் குழந்தைகளை பெற்றோர் இருக்கும் படுக்கை அறையிலேயே இடம் கொடுக்கலாமா..? அல்லது தனி அறை அவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டுமா..? என்ற விவாதம் நடைபெற்றது.

இதில் இரு தரப்பிலிருந்து பலரும் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர். அதில் பிரதானமாக பேசப்பட்ட விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்கு தனி அறை கொடுத்து விட வேண்டும் என்று கூறுபவர்களுடைய பிரதான எதிர்பார்ப்பாக இருப்பது உடலுறவு மட்டும்தான்.. அதை தவிர வேறு எந்த காரணத்தையும் அவர்களால் கூற முடியவில்லை.. என்று குழந்தைகளுக்கு தனியறை கொடுக்கக் கூடாது என்று கூறுபவர்கள் வாதிட்டனர்.

இதில் சிலர் வெளிப்படையாகவே மனைவியுடன் நெருக்கமாக இருப்பதற்கு தடையாக இருக்கிறார்கள் என்பது போல தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

அந்த நேரத்தில் கடுப்பான கோபிநாத் அவர்களை திட்டும் விதமாக தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்தார். இந்த எபிசோடு குறித்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது, தனி அறை கொடுக்கும் போது குழந்தைகள் தடம் மாறி செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இருவருக்கும் ஒரு புரிதல் இருந்தால் கணவன் மனைவிக்கு சைக்கிள் கேப் போதும் பிள்ளைகளால் பிரச்சனை கிடையவே கிடையாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

இதுல என்னப்பா தவறு தன்னுடைய மனைவியிடம் ஒரு கணவர் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லையே வெளியில் சென்றால்தான் தவறு. 13 வயது வரை குழந்தைகள் என்றால் அது எப்போது மகிழ்ச்சி அடையும் நீங்கள் குழந்தை பெற்று விட்டீர்கள் என்பதால் அவர்களின் வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை. அதையும் தான் நாம் கவனிக்க வேண்டும்.

குழந்தைகள் சிறு வயதில் இரவில் தனியரையை அவர்களாகவே விரும்பாத வரை தயவுசெய்து ஏற்பாடு செய்யாதீர்கள். அவர்களின் மனநிலை மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. நாம் அவர்களை கண்காணிப்பது மிகவும் குறைந்துவிடும். அவர்கள் தனி அறையில் என்ன செய்கிறார்கள்..? என்பதை நம்மால் கவனிக்க முடியாது.

நம் வாழ்வின் நோக்கமே குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து எடுப்பதுதான். எனவே குழந்தைகளுக்கு தனியாக அறை இருக்கக் கூடாது.

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது கடமைகள் இருப்பது போல கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இல்லறம் என்பது ஒரு கட்டாயமான விஷயம். இந்த இல்லறம் சரியாக அமையவில்லை என்றால் கணவன் மனைவிக்குள் சிக்கல் ஏற்படும்.

இருவருக்கும் புரிதல் தான் இதனை சரி செய்யும். மற்றபடி குழந்தைகள் இருக்க தடையாக இருப்பார்கள் என்பதை கண்டிப்பாக ஒப்புக்கொள்ள முடியாது.

ஒரு கணவன் மனைவியின் எண்ணம் தான் விஷயம். குழந்தைகள் இருக்கிறார்களோ.. இல்லையோ.. இருவருக்கும் மனம் ஒத்துப் போனால் இதற்கு கட்டாயம் சரியான மார்க்கம் இருக்கிறது.

இப்படி பகிரங்கமாக அதை பேசுவதால் அந்த கணவன் ஏதேதோ நினைப்பதாக மற்றவர்கள் நினைக்க மாட்டார்களா? அவர் தன்னுடைய எதிர்பார்ப்பு பதிவு செய்கிறார். அவர் மீது ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

தயவு செய்து இதுபோல பேசாதீர்கள். தன் மனைவியிடம் எதிர்பார்ப்பது அந்த கணவர் வெளிப்படையாக பேசுகிறார். இது என்ன தவறு இருக்கிறது..? அவர் பேசுவதில் தவறு இருந்தால்.. திருத்தலாம்.. அதற்காக அவர்கள் குற்றவாளி போல நாம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இப்படி பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை என நம்முடைய கமெண்ட் செக்ஷன்ல பதிவு செய்யலாம்.

Summary in English : Recently, the Neeya Naana TV show sparked quite the debate about whether kids really need their own separate rooms. On one side, you had parents arguing that having a personal space helps children develop independence and gives them a sense of ownership. They believe it’s essential for kids to have a place to call their own where they can unwind, study, or just be themselves without distractions.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version