10 கோடி மேட்டரே இல்ல.. இதுதான் பஞ்சாயத்துக்கு காரணம்.. அம்பலமான நயன்தாராவின் தில்லாலங்கடி வேலை..!

தன்னுடைய திருமண வீடியோவில் தான் நடித்த நானும் ரவுடிதான் படத்தில் இருந்த காட்சிகளை பயன்படுத்த அனுமதி கொடுக்காத நிலையில் நடிகர் தனுஷ் மீது தனிமனித தாக்குதல் நடத்தும் விதமாக நடிகை நயன்தாரா வெளியிட்டிருந்த அறிக்கை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இந்த பஞ்சாயத்திற்கு முக்கியமான காரணம் மற்றும் அடிப்படையான காரணம் என்ன என்று தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

அதன்படி நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை பயன்படுத்துவதற்காக நடிகர் தனுஷிடம் விக்னேஷ் சிவனோ அல்லது நயன்தாராவோ முறையான அனுமதி கேட்கவில்லை.

அதற்கு மாறாக ஒரு தில்லாலங்கடி வேலையை பார்த்து இருக்கிறார்கள். இதுதான் நடிகர் தனுஷின் கோபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

தங்களுடைய திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த திட்டமிட்ட நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவன் அதற்கான அனுமதியை நடிகர் தனுஷிடம் நேரடியாக கேட்கவில்லை.

அதற்கு மாறாக நடிகர் தனுஷின் மேளாளரும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் நண்பருமான ஸ்ரேயாஸ் ஸ்ரீனிவாசன் என்பவரை தொடர்பு கொண்டு வொண்டர் பார் நிறுவனத்தின் இமெயிலில் இருந்து நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஒரு மெயில் அனுப்புமாறு கேட்டிருக்கிறார்கள்.

மேலும், இதனை ஏதோ பெரிய விஷயம் என்பது போல இல்லாமல் ஏதோ சாதாரண விஷயம் என்பது போலவே தனுஷின் மேனேஜரிடம் சாதரணமாக கேட்டு NOC-யை வாங்கிவிட முயற்சி செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

ஆனால், தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் ஸ்ரீநிவாஸ்.. இது நிறுவனம் சார்ந்த விஷயம்.. தனுஷ் சாரிடம் கலந்து கொள்ளாமல் என்னால் தன்னிச்சையாக இப்படி ஒரு மெயிலை அனுப்ப முடியாது என கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தை உடனடியாக நடிகர் தனுஷிடம் கூறியிருக்கிறார் ஸ்ரேயாஸ் ஸ்ரீநிவாஸ். தன்னுடைய படத்திற்கு தன்னிடம் அனுமதி கேட்காமல் என்னுடைய மேனேஜரிடம் தில்லாலங்கடி வேலை செய்து திருட்டுத்தனமாக அனுமதி பெற முயற்சி செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது கடுமையான கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் நடிகை நடிகர் தனுஷ்.

அதன் பிறகு முறைப்படி நடிகர் தனுஷிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தும் நடிகர் தனுஷ் அதனை நிராகரித்திருக்கிறார். மேலும் தங்களுக்கு தெரிந்த சினிமா தொடர்புகள் மூலம் நடிகர் தனுஷை மறைமுகமாக மிரட்டவும் முயற்சித்திருக்கிறார்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது நடிகர் தனுஷின் கோபத்தை மேன் மேலும் அதிகரித்துள்ளது. இந்த தகவல்களை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தன்னுடைய வீடியோவில் பேசியிருக்கிறார். இதனால் தான் நடிகர் தனுஷ் இந்த படத்தை காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவில்லை என்றும் அவருக்கு 10 கோடி ரூபாய் என்பதெல்லாம் பத்து ரூபாய் போன்றது.

முதல் முறையே தனுஷிடம் நேரடியாக கேட்டு இருந்தால் பிரச்சினையே கிடையாது. அவருடைய மேனேஜர் மூலம் தில்லாலங்கடி வேலை செய்து திருட்டுத்தனமாக அங்கீகாரத்தை பெற முயற்சி செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இதுதான் தனுஷின் கோபத்திற்கு காரணம் எனவும் பதிவு செய்திருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

Summary in English : So, here’s the scoop! Nayanthara and Vignesh Shivan recently found themselves in a bit of hot water when they tried to indirectly get the No Objection Certificate (NOC) for Naanum Rowdy Dhaan from Dhanush’s manager. Dhanush wasn’t too pleased with their approach and sparked some anger on his end.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version