“பாரு பாரு நல்லா பாரு.. பாத்துப்புட்டு தெறிச்சி ஓடு..” நயன்தாரா செஞ்ச வேலையை பாருங்க..!

நடிகை நயன்தாராவின் திருமண வைபவம் ஆவண வீடியோவாக நெட் ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த நடிகர் தனுஷ் அனுமதிக்கவில்லை.

நாங்கள் நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளத்தில் எங்களுடைய கைப்பேசியில் பதிவு செய்த வீடியோவை அந்த படத்தில் பயன்படுத்தியிருந்தோம். இதற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் நடிகர் தனுஷ்.

அண்ணன் மற்றும் அப்பாவாக வளர்த்து விடப்பட்டவர் தனுஷ். நான் தனி மரமாக வளர்ந்தவள் என்று பெரும் பரபரப்பை கிளப்பினார் நடிகை நயன்தாரா. இந்த விவகாரம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நீடித்தது.

அதன் பிறகு இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று விட்டது. இந்நிலையில், நேற்று மாலையில் இருந்து நடிகை நயன்தாரா சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெறவில்லை.

இதனால் சிவாஜி ப்ரொடக்ஷன் நிறுவனம் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடக்க நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது என்ற தகவல்கள் இணையத்தில் வைரலானது.

என்னடா இது வம்பா போச்சு என்று ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாக இருந்தனர். நடிகை நயன்தாராவின் இந்த செயலை கலாய்த்தும் விமர்சித்தும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2024 வருடம் நவம்பர் மாதமே இதற்கான NOC கடிதத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திலிருந்து நடிகை நயன்தாரா பெற்று இருக்கிறார். தற்போது இந்த என்ஓசி கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நயன்தாரா ரசிகர்கள்.. பாரு பாரு நல்லா பாரு.. பயாஸ்கோப் படத்தை பாரு.. பார்த்துப்புட்டு தெறிச்சி ஓடு.. என்று குசேலன் பட வடிவேலு கணக்காக இந்த கடிதத்தை இணைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

படங்களின் காட்சிகளை பயன்படுத்துவதில் நடிகை நயன்தாரா மற்றும் அவருடைய கணவர் இருவருமே கவனமாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் நடிகர் தனுஷ் இடம் அதற்கு உண்டான ஒப்புதல் கடிதத்தை நேரடியாக கேட்காமல் அவருடைய உதவியாளரிடம் திருட்டுத்தனமாக பெற முயற்சித்தது தான் தனுஷ் நயன்தாரா இடையே ஏற்பட்ட சண்டைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

Summary in English : Recently, a NOC (No Objection Certificate) letter from Shivaji Productions to the popular actress Nayanthara has taken the internet by storm. The letter went viral after some controversy sparked discussions online, and fans couldn’t get enough of it!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version