என்னடா நடக்குது இங்க.. ஜீ.வி.பிரகாஷ் முன்னாள் மனைவி சைந்தவி செய்த செயல்.. உச் கொட்டும் ரசிகர்கள்..!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவி சைந்தவியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார். இந்த விவாகரத்து குறித்த அறிக்கையை இருவரும் பரஸ்பரம் வெளியிட்டு அறிவித்தனர்.

இவர்கள் பிரிந்து விட்டதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள் என்றாலும், இவர்களுடைய வழக்கு இன்னமும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இருவரும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் எதுவும் செய்யவில்லை.

இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜி வி பிரகாஷின் கான்செர்ட்டில் அவருடைய முன்னாள் மனைவி சைந்தவி கலந்து கொண்டு ஒரு பாடலை பாடினார்.

இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி ட்ரெண்டானது. ஏ ஆர் ரகுமானுடைய அக்காவின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்த ஜீவி பிரகாஷ் தன்னுடைய முதல் படமான வெயில் படத்தின் மூலம் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

அதன் பிறகு அவர் இசையமைத்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. குத்து பாடல்.. மெலோடி பாடல்.. வெஸ்டர்ன் பாடல்.. என எந்த ஜானரில் பாடலை கொடுத்தாலும் தனக்கென தனி முத்திரை பதித்தார்.

இசையமைப்பில் தன்னுடைய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் செலுத்த முடிந்த ஜிவி பிரகாஷுக்கு ஒரு நடிகராக ஜெயிக்க முடியவில்லை. சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த படங்களை இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறது என்றாலும் ரசிகர்கள் இன்னமும் ஜி.வி பிரகாஷ் ஒரு இசையமைப்பாளராகவே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தன்னுடைய மனைவியை இவர் பிரிந்து விட்டார் என்றாலும் தொழில் முறையில் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சேர்ந்தே பயணித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற மலேசியா இசைக்கச்சேரியில் கலந்து கொண்டார். இந்நிலையில், அடுத்த ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அதுதான் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜிவி பிரகாசுக்கு அமரன் படத்திற்க்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.

அப்போது அவருடைய முன்னாள் மனைவி சைந்தவி உற்சாகத்தோடு கைகளை தட்டி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை பார்த்து ரசிகர்கள் இவர்கள் நிஜமாகவே பிரிந்து விட்டார்களா…? அல்லது பிரிந்து விட்டோம் என வெறுமனே அறிக்கை மட்டும் கொடுத்தார்களா..? ஒருவருக்கொருவர் இன்னமும் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

என்ன நடக்குது இங்க..? இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் தான் என்ன..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : In a heartwarming moment that had everyone talking, the talented singer and ex-wife of GV Prakash took the stage to give him a well-deserved ovation when he was awarded for his incredible music in the movie AMARAN.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version