நடிகர் பாண்டியன் இறந்த காரணம்..! இப்படியும் மனிதர்கள் இருக்காங்களா..?

மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் பாண்டியன் எப்படி இறந்தார்..? அவருடைய மரணத்திற்கு அவருடைய நண்பர்கள் எப்படி காரணமாக அமைந்தார்கள்..? என்று பார்க்கலாம்.

கடந்த 1983 ஆம் ஆண்டு மண்வாசனை என்ற திரைப்படத்தில் வீரண்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாண்டியன்.

அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து 1984 ஆண்டு மட்டும் 14 படங்களில் நடித்திருந்தார். அந்த அளவுக்கு இவருக்கான மார்க்கெட் இருந்தது.

நடிகராக இருந்த பாண்டியன் ஒரு கட்டத்தில் பிரபல அரசியல் கட்சியில் சேர்ந்து அந்தக் கட்சிக்காக நட்சத்திர பேச்சாளராக பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு கிடைத்த கூடா நட்பு இவருக்கு சரியான கேடான பாதையை காட்டிவிட்டது. அவர்களுடன் குடியும் கூத்துமாக நாட்களை குதூகலமாக கழித்துக் கொண்டிருந்தார் பாண்டியன்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பர்களுக்காக அவர்களுடைய பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்காக தன்னுடைய சொத்தை விற்று அவர்களுக்கு உதவி செய்திருக்கிறார் பாண்டியன்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே பணம் இன்றி சிரமப்பட்டு இருக்கிறார். கிடைக்கக்கூடிய சிறு சிறு வாய்ப்புகள் ஏற்று நடித்துக் கொண்டு காலத்தை தள்ளிக் கொண்டு இருந்த இவருக்கு அவருடைய நண்பர்கள் உதவி செய்யவில்லை.

அவரிடம் உதவி பெற்ற நண்பர்கள் இவரை ஒரு மனிதனாக கூட மதிக்காமல் அம்போ என விட்டு விட்டனர். தன்னுடைய நண்பர்களுக்காக தன்னுடைய சொத்தை விற்று உதவி செய்தேனே.. இப்பொழுது அவர்களெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.. என்னுடைய நிலை மோசமாக இருக்கிறது.. என்னை ஒருவரும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்களே.. என்ற வேதனையில் குடிக்கு அடிமையாகி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 49 வயதிலேயே மரணம் அடைந்தார் நடிகர் பாண்டியன்..!

Summary in English : The recent news about actor Pandian‘s tragic passing due to alcohol addiction has left many of us reflecting on the complexities of friendship and support. It’s heartbreaking to think that those who once surrounded him during his rise to fame and fortune seemed to vanish when he needed them the most.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version