Game Over ஆன Game Changer.. முதல் நாள் வசூல் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகர் ராம் சரண், எஸ்.ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் நடிகை கியாரா அத்வானி கூட்டணியில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் ( Game Changer )திரைப்படம் நேற்று (ஜன.10) பொங்கல் விடுமுறை முன்னிட்டு உலகம் முழுதும் வெளியானது.

இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தவித்து வருகிறது.

அரத பலசான கதை.. சொதப்பலான திரைக்கதை என ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது Game Changer திரைப்படம் என்பதுதான் பொதுவான சினிமா ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில், முதல் நாளான நேற்று உலகம் முழுதும் Game Changer திரைப்படம் 52 கோடி வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன.

இயக்குனர் சங்கருக்கு ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படமாவது அள்ளிக் கொடுக்குமா..? என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை அந்த எதிர்பார்ப்பு சுக்குநூறாக உடைத்து இருக்கிறது.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் முதல் நாளே 300 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்திருந்தது.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இருக்கும் அதே ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ராம்சரண் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள Game Changer திரைப்படம் 100 கோடி ரூபாய் கூட வசூலிக்க முடியாமல் திணறி இருக்கிறது.

படத்திற்கு கிடைத்துள்ள மோசமான விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் பத்து நாட்கள் விடுமுறை இருப்பதால் படத்தை எப்படியாவது கரை சேர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Summary in English : Wow, what a phenomenal start for Game Changer! On its very first day, the movie raked in a staggering 52 crore rupees globally. That’s right—52 crores! It’s no surprise that audiences are buzzing about it.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version