பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபாடு..!

பிறந்திருக்கும் 2025 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் பலரும் தங்களுடைய விடுமுறையை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு தொடங்கியதை தொடர்ந்து பக்தர்கள் பலரும் பிள்ளையார்பட்டி விநாயகர் அருளை பெற நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்து வருகின்றனர்.

அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ள காரணத்தினால் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த பிள்ளையார்பட்டி கோயில் குடைவரை கோயில் ஆகும்.

மலைகளை குடைந்து அரை அமைத்து அந்த மலையிலேயே கடவுளின் சிற்பத்தை செதுக்கி வழிபாடு செய்வதற்கு பெயர் தான் குடைவரை கோயில். திருப்பத்தூரில் இருந்து குன்றக்குடி செல்லும் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குன்றக்குடி முருகன் கோவிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கையில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்குடியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய இந்த திருக்கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.

இந்த கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என கூறப்படுகிறது. தமிழர்கள் கட்டிடக்கலையின் மூலம் கோயில் சிறப்பாக கட்டப்பட்டு இருக்கிறது. கோயில் திருமதில் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏழு நிலைகளுடன் அமைந்துள்ள இந்த கோபுரம் ஆதிட்டானம் முதல் கல்லாறம் வெள்ளைக்கல்லாளும் அவருக்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதைமண் கொண்டு எழுப்பப்பட்டு இருக்கிறது.

கற்பக விநாயகர் சன்னதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகர் கோபுரம் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது இந்த கோபுரம்.

நவ கிரகங்களின் ரூபமாக கற்பக விநாயகர் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கற்பக விநாயகரை வழிபாடு செய்யும்போது நவ கிரகங்களால் ஏற்பட்டிருக்கக் கூடிய தோஷங்கள் பாதிப்புகள் நீங்கி, வீட்டில் செல்வம், லட்சுமி கடாட்சம் பெருகி, பணம் தங்கும் என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக கற்பது விநாயகரை தரிசித்து வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக வேண்டி நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்து வருகின்றனர் பக்தர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version