ஆபாச பாட்டுக்கு இப்படி ஒரு சண்டையா.. பிரபு தேவா பாடலை காரி துப்பும் ரசிகர்கள்.. இது என்ன கஷ்ட காலம்.!

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்தே திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் என்பது இருந்து வருகிறது. முக்கியமாக பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது.

இதனாலேயே கவிஞர்களைக் கொண்டுதான் அப்பொழுதெல்லாம் பாடல் வரிகள் எழுதப்பட்டன. ஏனெனில் இசைக்கு தகுந்த வகையில் பாடல் வரிகள் இருந்தால் கூட அவை அர்த்தமுள்ளதாகவும் கவித்துவத்துடன் இருக்க வேண்டும் என்பது முக்கிய விஷயமாக இருந்தது.

இப்படி ஒரு சண்டையா

ஆனால் தற்போதைய தலைமுறை மத்தியில் பாடல் வரிகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் என்பது இருக்கவில்லை. தொடர்ந்து எந்த விதமான வரிகளை போட்டாலும் அதை கேட்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்.

அவர்களை பொறுத்தவரை பாட்டு கேட்பதற்கு நன்றாக இருக்கிறதா என்பது மட்டுமே முக்கிய விஷயமாக இருக்கிறது. இதனால் பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பு என்பது கணிசமாக குறைந்து விட்டது. பெரும்பாலும் கதாநாயகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களே பாடல்களுக்கான வரிகளை எழுதுவதை பார்க்க முடிகிறது.

இது என்ன கஷ்ட காலம்

மேலும் இதனால் அர்த்தமற்ற பாடல் வரிகள் அதிகமாக சினிமாவில் வலம் வர துவங்கியிருக்கின்றன. இந்த நிலையில் தற்சமயம் பிரபுதேவா நடித்திருக்கும் ஒரு படத்தின் பாடல் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஜாலியோ ஜிம் கானா என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்த வருகிறார் பிரபு தேவா.

சக்தி சிதம்பரம் என்கிற இயக்குனர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் நேற்று வெளியாகி இருந்தது. இந்த பாடலில் உள்ள பாடல் வரிகள் அனைத்துமே இரட்டை வசனம் இரட்டை அர்த்தத்தினாலும் ஆபாச அர்த்தங்களுடனும் இருந்தது.

சர்ச்சையான பாடல்:

இதனை அடுத்து இது அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. இப்படி இருக்கும் பொழுது இந்த பாடல் வரிகளை எழுதியது யார் என்பதிலேயே இப்பொழுது ஒரு பெரிய பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடல்வரிகளை ஜெகன் கவிராஜ் என்பவர்தான் எழுதியதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.

ஆனால் ஜெகன் கவிராஜுக்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இயக்குனர் ஜெகன் கவிராஜன் பெயரை நீக்கிவிட்டு சக்தி சிதம்பரம் என்கிற அவருடைய பெயரை போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version