நீங்களும் நக்கி பாக்குறீங்களா..? நேரலையில் மிரண்டு போன பிரியா பவானி சங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய தனியார் ஊடகம் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்டார். அதில் மேஜிக் கலைஞர் ஒருவரை வரவழைத்து பிரியா பவானி சங்கரிடம் மேஜிக் செய்து காட்டப்பட்டது.

அந்த மேஜிக் என்னவென்றால், பிரியா பவானி சங்கர் அவருக்கு பிடித்த ஒரு இனிப்பை நினைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மேஜிக் கலைஞர் தன்னுடைய மேஜிக்கை முடித்த பிறகு அவருடைய உள்ளங்கையை நக்கி பார்த்தால் அந்த இனிப்பின் சுவை தெரியும். இதுதான் அந்த மேஜிக்.

இதனை தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கரிடம் உங்களுக்கு பிடித்த இனிப்பு என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை பிரியா பவானி சங்கர் திருப்பதி லட்டு எனக்கு பிடிக்கும் என்று கூறினார்.

இப்பொழுது, உங்களது வலது கரம் அல்லது இடது கரம் எது உங்கள் விருப்பம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரியா பவானி சங்கர் வலது கரம் என்று கூறினார்.

சில வினாடிகள் மேஜிக் செய்த அந்த மேஜிக் மேன் இப்பொழுது உங்களுடைய கரங்களை நன்றாக தேய்த்து விட்டு உங்களுடைய வலது கரத்தை முகர்ந்து பாருங்கள் என்று கூறினார்.

உடனே முகர்ந்து பார்த்தார் நடிகை பிரியா பவானி சங்கர். ஏதாவது தெரிகிறதா..? என்று கேட்டார் மேஜிக் மேன். இதுவும் தெரியவில்லை.. எதையும் உணர முடியவில்லை என கூறினார் பிரியா பவானி சங்கர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் திருப்பதி லட்டுவை நினைத்துக் கொண்டு இரண்டு கரங்களையும் நன்றாக தேய்த்து மூடிக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

அடுத்த சில வினாடிகள் மேஜிக் செய்த அந்த மேஜிக் நிபுணர்.. மீண்டும் வலது கரமா…?அல்லது இடது கரமா..? என்ற கேள்வி எழுப்பினார்.

அதற்கு மீண்டும் நடிகை ப்ரியா பவானி சங்கர் வலது கரம் என்று கூறினார். இப்போது உங்களுடைய வலது கரத்தை நக்கி பாருங்கள் என்று கூறினார். உடனே, தன்னுடைய வலது உள்ளங்கையை நக்கிய நடிகை பிரியா பவானி சங்கர் ஆச்சரியத்தில் வாயை பிளந்தார்.

வாவ்.. என்ன இது..? நிஜமாகவே இனிப்பாக இருக்கிறது என்று அதிர்ச்சியானார். அப்போது ஆச்சரியப்பட்டு போன தொகுப்பாளினி.. என்னங்க சொல்றீங்க..? நிஜமாகவே இனிப்பாக இருக்கிறதா என்று அவரும் கேள்வி எழுப்பினார்.

அப்போது பிரியா பவானி சங்கர்.. நீங்களும் நக்கி பாக்குறீங்களா என்று சிரித்தார். இரண்டு முறை நக்கி பார்த்த நடிகை பிரியா பவானி சங்கர் மூன்றாவது முறை நக்கும் போது அந்த இனிப்பு சுவை தெரியவில்லை.

இரண்டு முறை தான் இது வேலை செய்யுமா..? என்று மேஜிக் மேனை பார்த்து ஆச்சரியத்துடன் புருவம் உயர்த்துகிறார். இவருடைய இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


நன்றி – BehindwoodsTV

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version