“லவ் பண்ணும் போது அந்த மேட்டருக்கு செலவு பண்ண தேவையில்ல..” பிரியா பவானி சங்கர் ஒரே போடு..!

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து ராஜவேலு என்பவரை காதலுக்கு வருகிறார். இன்னும் சிலர் இவர்கள் இருவரும் திருமணமே செய்து கொண்டார்கள். ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். திருமணம் செய்து கொண்டதை வெளியே சொன்னால் பட வாய்ப்பு கிடைக்காது என்பதால் பிரியா பவானி சங்கர் இதனை மறைக்கிறார் என்று கூட கூறுகிறார்கள்.

ஆனால், இது உண்மையா..? இல்லையா..? என்பதை பிரியா பவானி சங்கர் தான் விளக்க வேண்டும். இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர், நான் என்னுடைய காதலை மறைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நான் என்னுடைய கல்லூரி காலத்திலேயே காதலிக்க தொடங்கி விட்டேன். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் என்னுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

தற்போது நான் ஒரு நடிகையாகி விட்டேன் என்பதற்காக அதனை டெலிட் செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது. ஏனென்றால், எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் இது.

காதலிக்கும் பொழுது நான் முதல் முதலில் என்னுடைய காதலனுக்கு போட்ட கண்டிஷன் ஒன்றுதான். படிக்கும் காலத்தில் நமக்கு சம்பளம் எதுவும் கிடையாது. பாக்கெட் மணியை வைத்து தான் நாட்களை கடக்க வேண்டும்.

அப்படி கிடைக்கும் பாக்கெட் மணியை பரிசு என்ற பெயரில் பொசுபொசு பொம்மைகள் வாங்கிக் கொடுப்பது.. தேவைப்படாத பொருட்களை பரிசு என்ற பெயரில் வாங்கி கொடுப்பது.

அந்த பொம்மைக்கு சாப்பாடு ஊட்டி விடுவது.. அந்த பொம்மையை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவது என எதையும் செய்யக்கூடாது. இப்படியான விஷயங்களில் பணத்தை செலவு செய்வதை விட அந்த பணத்தை வைத்து ஒரு நல்ல ஹோட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்பதுதான் அந்த கண்டிஷன்.

தற்போது வரை அதனை நாங்கள் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என பேசியிருக்கிறார் பிரியா பாவனை சங்கர். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : In a recent interview, actress Priya Bhavani Shankar shared her refreshing take on love and spending. She candidly mentioned that instead of splurging on stuffed toys, which often end up collecting dust, she believes it’s way better to invest that money in enjoying good food with your partner.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version