விவாகரத்து.. 2 திருமணம்.. 2 மகன்களுடன் தனியாக Ranjith மனைவி Priya Raman..!

என்னதான் ஒரு நடிகையாக இருந்தாலும் சீரியலில் நடித்த ஒரு கதாபாத்திரத்தின் மூலம் கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் பிரபலமாக சீரியல் ரசிகர்கள் வட்டாரத்தில் பிரபலமாக வளம் வந்தவர் இந்த ஆதி கடவுள் அகிலாண்டேஸ்வரி நடிகை பிரியா ராமன்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அது பொருத்தமாக இருந்திருக்காது என்ற அளவுக்கு தன்னுடைய சாமர்த்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த அளவுக்கு தில்லானா ஒரு கதாபாத்திரத்தில் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை தாண்டியும் நடித்திருந்தார் நடிகை பிரியா ராமன். இவர் கடந்த 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பிறந்தார்.

இவர் ஒரு மலையாளி. ஆனால், தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி இதுபோல பல்வேறு மொழிகளில் பேசத் தெரிந்தவர் .பிறந்தது மட்டும்தான் கேரளா, ஆனால் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார் நடிகை பிரியா ராமன். குறிப்பாக மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டி மோகன்லால் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் போது அந்த நேரத்தில் குறிப்பிட்ட நடிகர்களுடன் நடிகை பிரியா ராமனை தொடர்பு படுத்தி தவறான வதந்திகள் கிசுகிசுக்கள் வெளியாகி இவருடைய பெயரை டேமேஜ் ஆக்க முயற்சித்தன.

ஆனால், அதை எல்லாம் காதல் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் நடிகை பிரியா ராமன். தமிழில் நடிகர் ரஜினிகாந்த் எழுதி தயாரித்திருந்த வள்ளி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

நேசம் புதுசு என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது தன்னுடைய வாழ்க்கையை மாற்றும் ஒரு முடிவை எடுத்தார் நடிகை பிரியா ராமன். அதுதான் நடிகர் ரஞ்சித்தை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொள்ள முடிவு செய்தது.

1999 ஆம் ஆண்டு நடிகர் ரஞ்சித்தை திருமணம் செய்து கொண்டார் நடிகை பிரியா ராமன். இவர்களுக்கு ஆதித்யா ராவ் மற்றும் ஆகாஷ் ராவ் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

என்ன தான் நடிகர் ரஞ்சித் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றாலும் கூட காதல் என்றால் ரொமான்ஸ் என்றால் அது ரஞ்சித்துடன் மட்டும் தான் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் அவரை பிரிந்து இருக்கிறேன் தவிர மற்றபடி அவர்தான் என்னுடைய கணவர் என்ற நினைப்பில் வாழ்ந்திருக்கிறார் நடிகர் பிரியா ராமன்.

ஒரு கட்டத்தில் மீண்டும் இருவர் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு இது உதவி இருக்கிறது. இப்படி ஒரே நபரை இரண்டு முறை திருமணம் செய்து இருக்கிறார் நடிகை பிரியா ராமன்.

முதல் முறை தன்னுடைய கணவரை விவாகரத்து செய்த பிறகு தன்னுடைய இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு வளர்த்த நடிகை பிரியா ராமன் ஒரு கட்டத்தில் தன்னுடைய மகன்களின் தந்தையையே மீண்டும் திருமணம் செய்து கொண்டார் என்பது வேறு எந்த நடிகை வரலாற்றிலும் இல்லாத ஒரு சம்பவம்.

Summary in English : Priya Raman, a name synonymous with resilience and love, has made headlines by marrying the same person twice, a rare feat that speaks volumes about her commitment and the strength of their bond. In an industry where relationships often face scrutiny and challenges, Priya’s journey defies conventional norms and showcases a profound narrative of second chances.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version