வாய்ப்பு இருந்தா கண்டிப்பா அது நடக்கும்.. தளபதி 69 அப்டேட் கொடுத்த பிரியங்கா மோகன்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தற்சமயம் முக்கிய நடிகையாக மாறியிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன். பிரியங்கா மோகன் ஆரம்பத்தில் தெலுங்கில்தான் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக தெலுங்கில் அறிமுகமாகும் நடிகைகள் அதிக கவர்ச்சியாக நடித்ததால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள். ஆனால் பிரியங்கா மோகனை பொருத்தவரை அப்படி எல்லாம் நடிக்காமல் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார்.

வாய்ப்பு இருந்தா கண்டிப்பா அது நடக்கும்

தமிழில் கூட அதிக கவர்ச்சி இல்லாத காட்சிகளைதான் தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார். தமிழில் டாக்டர் திரைப்படத்தின் மூலமாக இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

குழந்தைத்தனமான அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. அதனை தொடர்ந்துதான் அவருக்கு தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. முக்கியமாக இவர் தமிழ் சினிமாவில் வளர்ச்சி அடைந்ததற்கு சிவகார்த்திகேயனின் பங்கு முக்கியமானது ஆகும்.

தளபதி 69 அப்டேட்

ஏனெனில் டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு டான் திரைப்படத்தில் மீண்டும் பிரியங்கா மோகனுக்கு வாய்ப்பு கொடுத்தார் சிவகார்த்திகேயன். டான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் வாய்ப்பை பெற்று வருகிறார் பிரியங்கா மோகன். சமீபத்தில் அவர்கள் பேட்டியில் கூறும் பொழுது தளபதி 69 திரைப்படம் குறித்த சில விஷயங்களை பேசி இருந்தார்.

நடிகர் விஜயிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் எது என்று பிரியங்கா மோகனிடம் கேட்ட பொழுது விஜய்யின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். வெகு காலங்களாகவே அவர் அரசியலின் மீது ஈடுபாடு கொண்டு இருந்தார். இப்பொழுது அரசியல் கட்சியும் துவங்கிவிட்டார் என்று கூறியிருந்தார் ப்ரியங்கா மோகன்.

பிரியங்கா மோகன்

ஆனால் அவர் திரைப்படங்கள் நடிக்கவில்லை என கூறுகிறாரே? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது அவருடன் திரைப்படம் நடிக்க முடியவில்லை என்பது வருத்தம்தான். ஆனால் கண்டிப்பாக அதற்கு வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இதை வைத்து பார்க்கும் பொழுது தளபதி 69 திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன ஏனெனில் இந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய் படமே நடிக்க மாட்டார் என்று இது குறித்து ரசிகர்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version