மருமகன் மட்டுமல்ல மாமனாரிடமும் சிக்கி சீரழியும் நயன்தாரா..! வச்சி செய்யும் நெட்டிசன்ஸ்..!

தன்னுடைய திருமண நிகழ்வை ஒரு ஆவணப்படமாக வெளியிட்டு அதன் மூலமும் சில பல கோடிகளை வருமானமாக பெற்று இருக்கிறார் நடிகை நயன்தாரா.

ஒரு நடிகையாக இருப்பவர் தங்களுடைய திருமண காட்சிகளை ரசிகர்களுக்கு காட்டுவதற்கு பணம் பெற்று இருக்கிறார் என்பதைத்தான் இதை புரிந்து கொள்ள முடியும் என அப்போதே விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

ஏனென்றால், நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. நெட்ஃப்ளிக்ஸ் சாராத எந்த புகைப்பட கலைஞரும் உள்ளே இருக்கக் கூடாது.

மட்டுமில்லாமல் திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது கேரளத்து மகாராணி நயன்தாராவின் திருமணம்.

அப்படி என்னப்பா… ஊரு இல்லாத கல்யாணத்தை பண்றாங்க இவங்க.. என்று அந்த நேரத்தில் கடுமையாக விமர்சித்தார்கள் இணைய வாசிகள்.

இந்நிலையில் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் அந்த திருமணத்தின் ஆவணப்படம் வெளியாகாமல் இருந்தது. இதற்கு காரணம் நடிகர் தனுஷ் தான் என்று சமீபத்தில் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார் நடிகை நயன்தாரா.

நடிகர் தனுஷ் தன்னுடைய பணத்தை போட்டு தயாரித்த ஒரு படைப்பிற்கு உரிமை கோறுகிறார். அந்த உரிமையை கொடுப்பதற்கு அவர் வைப்பது தான் விலை. அதனை கொடுக்க முடிந்தால் கொடுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள்.

அதை விட்டுவிட்டு நான் தனியாக வளர்ந்து வந்தவள்.. தனுஷ் அவருடைய அண்ணன் அப்பாவால் வளர்ந்துவிடப்பட்டவர் என்று நெப்போட்டிஸம் பற்றி பேசுவதற்கு இங்கே என்ன இருக்கிறது..?

ஒரு தயாரிப்பை உங்களால் முடிந்தால் பணம் கொடுத்து வாங்குங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள். அதனை விற்பவரை நீங்கள் குறை சொல்வது எந்த வகையில் நியாயம்..? என கடுமையான விமர்சனங்களை நயன்தாரா மீது வைத்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் அந்த ஆவணப்படத்தில் சந்திரமுகி படத்தின் சில காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார் நடிகை நயன்தாரா இதற்கு முறையான அனுமதியை எங்களிடம் பெறவில்லை என்று சந்திரமுகி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

ஏற்கனவே மருமகன் தனுஷ் படத்தில் சிக்கிய நடிகை நயன்தாரா தற்போது மாமனார் ரஜினிகாந்த் படத்திலும் சிக்கி சீக்கியடிக்கிறார்.. தன்னோட கல்யாண கேசட்டை கூட ஒரு விற்பனை பொருளாக பார்க்கும் நயன்தாராவுக்கு இது தேவை தான் என்று விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.

Summary in English : Recently, there’s been quite a buzz surrounding actress Nayanthara and her marriage documentary video. It seems that the producers of the Chandramukhi movie have sent her a notice regarding this video, claiming she didn’t give them proper acknowledgment.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version