புஷ்பா 2 படம் வொர்த்தா? இல்லை.. வேஸ்டா..? ப்ரீமிய காட்சியின் ட்விட்டர் விமர்சனம்..

புஷ்பா படத்தின் வெளியீட்டை அடுத்து இதன் இரண்டாவது பகுதி எப்போது வரும் என்று ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு மைத்திரி மூவி மேக்கப் தயாரிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சிகள் வெளிவந்தது. 

இதனைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்தப் படத்தை தற்போது ஒரு திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். புஷ்பா 2 படம் இரவில் வெளியான நிலையில் ரசிகர்கள் அந்த படத்தை பார்த்துவிட்டு சோசியல் மீடியாவில் பேச ஆரம்பித்து விட்டார்கள். 

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாஸில், ராஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், கஜபதி பாபு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நடித்திருக்க புஷ்பராஜாக அல்லு அர்ஜுன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் என்டர்டைன் செய்துவிட்டார். 

புஷ்பா 2 படம் வொர்த்தா? இல்லை.. வேஸ்டா..?

ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இந்தியன் 2, கங்குவா, தேவரா உள்ளிட்ட படங்கள் சொதப்பியது போல புஷ்பா 2 படமும் சுதப்ப கூடாது என்று ரசிகர்கள் எண்ணியது போல இந்த படம் பெஸ்ட்டா? இல்லை வேஸ்டா? என்பதை பார்க்கலாம். 

இது பாலிவுட்டின் பிரபல விமர்சகர் சரண் ஆதர் புஷ்பா 2 படத்தை பார்த்துவிட்டு மெகா ப்ளாக் பஸ்டர் திரைப்படம் என்று விமர்சனம் செய்து இருக்கிறார். யாரையும் ஏமாற்றாத வகையில் தரமான சரக்காக புஷ்பா 2 உள்ளது.

சண்டை காட்சிகள் படத்தில் வேற லெவலில் இருந்தாலும் இந்தியாவின் அனைத்து சினிமா விருதுகளுக்கும் அல்லு அர்ஜுன் தகுதியானவர் என்பதை படம் நிரூபித்து விட்டது. 

படத்தின் முதல் பாதியில் ஓவர் ஹைப் கொடுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது பகுதியில் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளை தந்து அறுப்பதாக இந்த படம் ஆவரேஜ் படம் தான் என்று தெலுங்கு ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகிறார்கள். 

மேலும் படத்தில் அல்லு அர்ஜுன் வரும் கங்கம்மா ஜதாரா சண்டை காட்சி எல்லாம் வரும்போது ரசிகர்கள் தியேட்டரிலேயே சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுகிறார்கள் என்று சிலர் ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். 

ப்ரீமிய காட்சியின் ட்விட்டர் விமர்சனம்..

அதிலும் அல்லு அர்ஜுன் காளி வேடம் அணிந்து கொண்டு சேலையில் படத்தில் நடிப்பதைப் போலவே கோலிவுட் ரசிகர் ஒருவர் புடவை மற்றும் அதே மேக்கப் அணிந்து தியேட்டர்களில் வலம் வந்த காட்சி ரசிகர்களை ஈர்த்துள்ளது. 

அத்தோடு இந்தியாவின் டாப் 5 திறமையான நடிகர்களில் வரிசையில் இருப்பார் பகத் பாசில். எனினும் அவர் நடித்த மோசமான படம் என்றால் அது புஷ்பா 2 தான் இரண்டாவது பாகத்தில் இவர் மொத்தத்திலும் சொதப்பிவிட்டார் என்று சொல்லுகிறார்கள். 

மேலும் கமர்சியல் படம் எடுக்கிறோம் என்ற பெயரில் இப்படி கோமாளித்தனம் பண்ணுவது சரியில்லை. புஷ்பா 2  என நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு புஷ்பா 2 வெளிவந்த பிறகு விரைவில் முழு விமர்சனமும் தெரிந்து விடும். 

Summary in English: Pushpa 2 has hit the screens, and as expected, it’s causing quite a stir on Twitter! Allu Arjun is back, and fans were buzzing with excitement leading up to the release. However, the response has been a bit of a mixed bag.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version