விஜய் இப்படி பேசுனது ஆச்சரியமா இருக்கு.. ஆனா பாஜக பத்தி மட்டும்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி..!

தமிழில் தியேட்டர் ஸ்டாராக திகழும் நடிகர் விஜய் விரைவில் தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் களம் காண இருப்பதால் அவர் துவங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் உறுப்பினர் சேர்க்கும் பணி படு தீவிரமாக நடந்து வருகிறது. 

அதுமட்டுமல்லாமல் அண்மையில் இருந்த கட்சியின் முதல் மாநாடு பிரம்மாண்டமான முறையில் வி சாலையில் நடந்ததை அடுத்து வருகின்ற 2026-ஆம் தேதி நடைபெற இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி மற்றும் திமுக கட்சிகளுக்கு பலத்த போட்டியாக இவர் இருப்பார் என்று இணையங்களில் செய்திகள் கசிந்தது.

விஜய் இப்படி பேசுனது ஆச்சரியமா இருக்கு.. 

இந்நிலையில் தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த எம் ஆர் ராதாவின் மகள் ராதிகா சரத்குமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு பன்முகத் திறமையை கொண்டவர். 

அரசியலிலும் ஈடுபட்டு வரும் நடிகை ராதிகா அண்மையில் விஜய் நடத்திய முதல் மாநாட்டில் விஜய் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி பல்வேறு வகையில் விமர்சனங்களை முன் வைத்து பேசி இருக்கிறார்.

அதில் சினிமாவில் வசனம் பேசும் போது கூட சத்தம் இல்லாமல் உதடு அசைவது மட்டும் தெரியக்கூடிய வகையில் பேசக்கூடிய விஜயை தனக்கு குழந்தை பருவத்தில் இருந்து நன்கு தெரியும். இதுவரை அதட்டி பேசியதோ அல்லது சத்தமாக பேசியதோ கிடையாது. 

அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் ஆவேசமாக பேசியதை குறித்து ராதிகா பேசிய விஷயங்கள் தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. 

இதற்குக் காரணம் கூச்ச சுபாவம் கொண்ட விஜயா இப்படி என்று கேள்வியை எழுப்பக் கூடிய வகையில் அவர் மாநாட்டில் 48 நிமிடங்கள் உரையாற்றிய பேச்சு இருந்தது என்று சொல்லலாம்.

ஆனா பாஜக பத்தி மட்டும்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி..

கூச்ச சுபாவம் கொண்டு இருக்கக்கூடிய விஜய் எப்படி அரசியலில் பேசுவார் என்று எதிர்பார்த்து பல்வேறு வகைகளில் வார்த்தைகளை விட்டவர்களின் வாயை பிளக்கக்கூடிய வகையில் ஆக்ரோஷமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து ஈர்த்தார். 

ராதிகா சரத்குமார் சொல்லும் போது விஜய் எந்த விஷயத்தையும் செய்வதற்கு முன்பு பலமுறை யோசிக்க கூடிய நபர் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இதனால் தான் அவர் திமுகவை நேரடியாகவே எதிர்த்துப் பேசி இருக்கிறார் என்ற குண்டை போட்டு இருக்கிறார். 

அத்தோடு பாஜகவை பற்றி பேச வேண்டும் என்றால் சற்று யோசித்து தான் பேசுவார் என்று சொல்லி இருக்கிறார். இதைத்தொடர்ந்து அதிமுக குறித்து ஏன் ராதிகா பேசவில்லை என்று பெரும்பாலான மக்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். 

இந்நிலையில் விஜய் அரசியலை வேறு விதமாக பார்க்கிறார் என்று ராதிகா கூறியதோடு மட்டுமல்லாமல் தெறி படத்தில் அவரோடு இணைந்து நடிக்கும் போது பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அதிக அளவு பேச மாட்டார். அப்படி இருக்கக்கூடிய அவர் மாநாட்டில் எப்படி ஆக்ரோஷமாக பேசினார் என்பது என்னால் நம்ப முடியவில்லை என ராதிகா சரத்குமார் பேசியிருக்கிறார். 

எனவே தற்போது இந்த விஷயம்  இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version