சீரியல் வாய்ப்புக்கு படுக்கை.. இப்படித்தான் அழைப்பார்கள்.. நடிகை ராதிகா பிரீத்தி கூறிய பகீர் தகவல்..!

நடிகை ராதிகா பிரீத்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் சீரியலில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். மட்டுமில்லாமல், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்தும் பதிவு செய்திருந்தார்.

அவர் கூறியதாவது, முதலில் பூவே உனக்காக சீரியலில் நான் ஒப்பந்தமான போது ஹீரோயின் என்று சொல்லி தான் ஒப்பந்தம் செய்தார்கள். கிட்டத்தட்ட பாதி சீரியலில் நான் ஹீரோயின் போலவே தான் தொடர்ந்து நடித்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் எனக்கு பல்வேறு அசவுகரிங்கள் நடந்தது.

குறிப்பாக நான் சீரியலில் ஒப்பந்தமான பிறகு படப்பிடிப்பு தளத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைப்பதாகத்தான் கூறினார்கள். ஆனால், இரண்டு வருடங்கள் என்னை ஹோட்டலில் தான் தங்க வைத்தார்கள்.

ஹோட்டல் உணவையே தினமும் உட்கொண்டு இருந்தால் எவ்வளவு பிரச்சனைகள் வரும். இதனால் உடல்நலம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு நான் ஆளானேன். அதைக் கூட சமாளித்து விடலாம். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே கழிவறையை பயன்படுத்த வேண்டும்.

ஒரே ஒரு கழிவறை தான் எங்களுடைய படப்பிடிப்பு தளத்திலில் இருந்தது. ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி ஒரே கழிவறையை தான் பயன்படுத்த வேண்டும்.

இதனால், எனக்கு மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்தில் பலருக்கும் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டு அவதிக்குள்ளானோம். உச்சகட்டமாக ஒரு கட்டத்திற்கு மேல் சீரியலில் என்னை வில்லி போன்று சித்தரிக்க தொடங்கி விட்டார்கள்.

ஏதாவது ஒரு சீரியலில் ஹீரோயினாக இருந்த நடிகை வில்லியாக காட்டி இருக்கிறார்களா..? ஆனால் என்னை காட்டினார்கள். ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்கள் வர ஆரம்பித்த பிறகு தான் எனக்கு இந்த விஷயமே புரிந்தது.

ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இப்படி எதிர்மறையான கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க வைத்து வில்லியாக ஒப்பந்தமான நடிகை ஹீரோயின் ஆக்கி விளையாடி இருக்கிறார்கள் என்று நொந்து போனேன்.

இதனால் தான் நான் அந்த பூவே உனக்காக சீரியல் இருந்து விலகிக் கொண்டேன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. அதேபோல, சீரியலிலும் சீரியல் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கத்தான் செய்கிறது.

இதனை சுற்றி வழைத்து எல்லாம் கேட்க மாட்டார்கள். நம்முடைய மேனேஜர்களே உங்களுக்கு கமிட்மென்ட் எல்லாம் ஓகேவா..? என்று உறுதி செய்து கொள்வார்கள். நடிகைகள் கொடுக்கும் பதிலுக்கு ஏற்ப அந்தந்த நடிகைகளுக்கு ஏற்றார் போல் அவர்கள் நடந்து கொள்வார்கள் என கூறியிருக்கிறார் ராதிகா பிரீத்தி.

Summary in English : Actress Radhika Preethi recently opened up about her experience on the popular serial “Poove Unakkaga,” and let’s just say, it’s quite the story! Initially, she was thrilled to be cast as the heroine, but things took an unexpected turn. As the storyline progressed, her character started shifting towards a negative lead. Radhika felt that this change didn’t align with her vision for the role or what she wanted to portray on screen.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version