மஞ்சு வாரியரை இந்த படத்துல தான் முதலில் பாத்தேன்.. மேடையில் போட்டு உடைத்த ரஜினிகாந்த்..!

தமிழ் திரை உலகில் அன்றும் இன்றும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் மேடையில் மஞ்சு வாரியர் பற்றி பேசிய பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரை படத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த மஞ்சுவாரியர் ரஜினிகாந்த் ஒரு இணைந்து படத்தில் நடித்ததை அடுத்து தமிழக ரசிகர்கள் மத்தியிலும் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.

மஞ்சு வாரியரை இந்த படத்துல தான் முதலில் பாத்தேன்..

70 வயதை கடந்துவிட்ட நிலையில் ரஜினி இன்னும் படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ஜெயிலர் படத்தை முடித்த கையோடு வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த கவனத்தை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ரஜினியின் நடிப்பையும் அதில் நடித்த மஞ்சு வாரியர் நடிப்பையும் நல்ல முறையில் விமர்சனம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் சன் டிவியில் வேட்டையன் ஆடியோ லான்ச் சமயத்தில் ரஜினிகாந்த் பேசிய வீடியோவானது படு வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் தான் மஞ்சு வாரியர் குறித்து ரஜினிகாந்த் பேசிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

அந்த வகையில் அவர் மஞ்சு வாரியாரை வேட்டையன் படத்தில் நடிக்க சொல்லி இருப்பதாக சொன்னதை அடுத்து ஏற்கனவே அவர் நடித்த படமான அசுரன் படத்தை தான் பார்த்ததாக சொல்லியதோடு அதில் வயதான கேரக்டரை பக்காவாக செய்ததை பாராட்டியே ஆக வேண்டும்.

இதைத் தொடர்ந்து இந்த படத்தில் உங்களோடு இணைந்து நடிக்க கரெக்டாக இருக்கும் என்று சொன்னார்கள். இதனை அடுத்து நான் உண்மையை சொல்ல விரும்புகிறேன். மஞ்சு வாரியார் மிகச்சிறந்த பெண்மணி.

மேடையில் போட்டு உடைத்த ரஜினிகாந்த்..

அதுமட்டுமல்லாமல் அவருடைய கல்ச்சர் மிகவும் சிறப்பானது. நல்ல டிக்னிஃபைடான பெண்மணி. வெரி எக்ஸலண்ட் ரியலி ஹார்ட் ஒர்க்கராக மஞ்சு வாரியர் விளங்குகிறார் என்று மேடையில் மஞ்சு வாரியார் குறித்து புகழாரம் சூட்டிய ரஜினி இதைத் தொடர்ந்து மஞ்சு வாரியர் எழுந்து நின்று வணங்கியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இருபது வருடங்களுக்கு முன்னாடி என்னிடம் ஹீரோயினி பற்றி கேட்டிருந்தார். நான் இவர்தான் வேண்டும் என்று சொல்லி இருப்பேன். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது அந்த அளவு நகைச்சுவை உணர்வோடு அந்த வீடியோ லாஞ்சிங் பேசி இருந்தார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி அதோடு மட்டுமல்லாமல் மஞ்சு வாரியாரை அசுரன் படத்தில் தான் முதலில் பார்த்தேன். அதை அடுத்து அவர் மேல் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது என்று மேடையில் போட்டு உடைத்த ரஜினிகாந்தின் பேச்சு மஞ்சு வாரியாருக்கு ஒரு மிகப்பெரிய விமர்சனத்தை பெற்று தந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version