கூலி நடிக்கும்போதே அடுத்த படத்துக்கு ப்ளான் போட்ட ரஜினி.. இயக்குனர் யார் தெரியுமா?.. டார்கெட் பண்ணி அடிக்கும் தலைவர்..!

நடிகர் ரஜினி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் முக்கிய கதாநாயகனாக இருந்து வருகிறார். எத்தனை காலங்கள் ஆனாலும் கூட ரஜினிக்கான மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் குறையவே குறையாது என்று கூறலாம்.

அந்த அளவிற்கு அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிக வசூலை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து ரஜினிகாந்த் நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார்.

இயக்குனர் யார் தெரியுமா?

வயதான காரணத்தினால் ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுக்கப் போகிறார் என்று ஒவ்வொரு திரைப்படத்தின் பொழுதும் வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவர் சினிமாவில் இருந்து விலகுவது என்ற ஐடியாவே இல்லாமல்தான் இருந்து வருகிறார்.

வேட்டையன் திரைப்படம் வெளியான சமயத்தில் கூட அடுத்த ரஜினி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அடுத்து கூலி திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் ரஜினிகாந்த். கூலி திரைப்படத்திற்கு பிறகு ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ப்ளான் போட்ட ரஜினி

ஜெயிலர் 2 திரைப்படத்தில் அவரது பேரக் குழந்தையை முக்கிய கதாபாத்திரமாக வைத்து கதை செல்ல இருப்பதாக ஒரு பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளியான ரஜினி திரைப்படங்களிலேயே பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படமாக இருந்தது.

அதனை தொடர்ந்து ஜெயிலர் 2வும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்பது ரஜினியின் எண்ணமாக இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தோடு ரஜினி ஓய்வெடுத்து விடுவார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தது. ஆனால் ஜெயிலர் 2வுக்கு பிறகும் அடுத்து ஒரு திரைப்படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

டார்கெட் பண்ணி அடிக்கும் தலைவர்

இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தற்சமயம் சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கிய இயக்குனர்களையே ரஜினிகாந்த் டார்கெட் செய்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்ற விஜய்யுடன் பணிபுரிந்த இயக்குனர்கள் படங்களில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அதே வரிசையில் வெங்கட் பிரபு படத்திலும் அவர் கமிட் ஆகி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version